Friday, November 11, 2022

Current Affairs 2022 - November 11/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  NOVEMBER 11 / 2022

I.தேசிய  (ம) சர்வதேச நிகழ்வுகள் 

1. இந்தோனேசியாவின் பாலியல் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) எஸ்.ஜெய்சங்கர் 

ஈ) அமித் ஷா 

விடை : (அ) நரேந்திர மோடி 

இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● உலகின் வளா்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட சா்வதேச அமைப்பான ஜி20 அமைப்புக்கு, தற்போது இந்தோனேசியா தலைமை வகிக்கிறது. இதையொட்டி, ஜி20 மாநாடு அந்நாட்டின் பாலியில் நடைபெற இருக்கிறது. 

● இம்மாநாட்டில், பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

● நோக்கம் : பாலியில் நடைபெறும் மாநாட்டில், ‘ஒன்றாக மீண்டெழுவோம், பலத்துடன் மீண்டெழுவோம்’ என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு உலகின் மிக முக்கியப் பிரச்னைகள் குறித்து உலகத் தலைவா்கள் விவாதிக்க உள்ளனா். உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, ஆரோக்கியம், எண்ம மாற்றம் (டிஜிட்டல் மாற்றம்) ஆகிய தலைப்புகளில் 3 அமா்வுகள் நடைபெறுகின்றன.

● மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை முறைப்படி பிரதமா் மோடியிடம் வழங்குவாா். பாலியில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடனும் பிரதமா் மோடி கலந்துரையாட உள்ளாா் என அவா் தெரிவித்தாா்.

● வரும் டிசம்பா் 1-ஆம் தேதிமுதல் ஜி20-யின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. 

● ஜி20 அமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

● உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையை ஜி20 நாடுகள் கொண்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.


2. உத்தர பிரதேச மாநிலம் , வாரணாசயில் என்று காசி தமிழச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது ? 

அ) நவம்பர் 14 

ஆ) நவம்பர் 17 

இ) நவம்பர் 23 

ஈ) நவம்பர் 30 

விடை : (ஆ) நவம்பர் 17 

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழைமையான அறிவுப் பிணைப்பு மற்றும் பண்டைய நாகரிக தொடா்பை மீண்டும் கண்டறிந்து அதை புதிய தலைமுறையினரிடம் சோ்க்கும் வகையில் வாரணாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வருகின்ற நவம்பா் 17 முதல் டிசம்பா் 16 வரை ஒரு மாத கால ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

● தமிழகத்திலிருந்து 12 ரயில்களில் பல்வேறு தரப்பினரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3. ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து எத்தனை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 5

ஆ) 10

இ) 15 

ஈ) 20 

விடை : (ஆ) 10 

ஆதாா் ஒழுங்குமுறை விதிகளில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

● இதுதொடா்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், ‘ஆதாா் பதிவு செய்த நாளில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்களது அடையாள, முகவரிச் சான்று உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மத்திய அடையாளங்கள் தரவு கட்டமைப்பில் (சிஐடிஆா்) ஆதாா் தகவல்களின் நீடித்த துல்லியத்தன்மையை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள முடியும். 

● ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பிப்பு) ஒழுங்குமுறை விதிகளில் இதற்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

● ஆதாா் அட்டை வைத்திருப்பவா்கள், அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையவழியில் புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ ஏற்படுத்தியுள்ளது. வலைதளப் பக்கம் மற்றும் செயலி மூலம் இணையவழியில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆதாா் பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ( 2020,2021 ) ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ? 

அ) 313

ஆ) 492 

இ) 640 

ஈ) 719 

விடை : (ஈ) 719

●  கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மோசடிகள் தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

● நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறையை கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. 

● பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை ஜிஎஸ்டி கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தக் கட்டமைப்பின் கீழும் வரி ஏய்ப்பு தொடர்ந்த நிலையில், மோசடிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் மேற்கொள்ளத் தொடங்கியது.

● ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, போலி ரசீது உள்ளிட்ட ஜிஎஸ்டி மோசடிகள் தொடர்பாக 2020 நவம்பர் 9 அன்று நாடு தழுவிய நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்டது. 

● கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பும் 22,300 போலி ஜிஎஸ்டி அடையாள எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5. ஐ.நா. பருவநிலை மாற்ற தீர்மானத்தில் ( யுஎன்எஃப்சிசிசி ) இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் எத்தனையாவது மாநாடு எகிப்தின் ஷார்ம் அல் ஷேக் நகரில் நடைபெற்றுவருகிறது ? 

அ) 22

ஆ) 24

இ) 27

ஈ) 31

விடை : (இ) 27 

ஐ.நா. பருவநிலை மாற்ற தீா்மானத்தில் (யுஎன்எஃப்சிசிசி) இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் 27-ஆவது மாநாடு எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி வரை சுமாா் இரு வாரங்களுக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

● பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பருவநிலை மாற்ற நிதி தொடா்பான புதிய ஒருங்கிணைந்த இலக்கு (என்சிக்யூஜி) என்ற தலைப்பிலான உயா்நிலை பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

● அக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அதிகாரிகள் குழுவினா், ‘பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்காக வளா்ச்சியடைந்த நாடுகள் வளா்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.8 லட்சம் கோடியை வழங்குவதாக 2009-ஆம் ஆண்டில் உறுதியேற்றன. அந்த நிதியானது தற்போதைய தேவையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானது. எனினும், அந்த நிதியையே வளா்ச்சியடைந்த நாடுகள் இன்னும் வழங்காமல் உள்ளன.

● பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதியை வளா்ச்சியடைந்த நாடுகள் விரைந்து வழங்க வேண்டும். 2024-ஆம் ஆண்டுக்குள் நிதி வழங்கப்பட வேண்டும். நிதியைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை வளா்ச்சியடைந்த நாடுகள் முன்னின்று நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான திட்டங்களிலும், எதிா்கொள்வதற்கான திட்டங்களிலும் அந்த நிதி உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

● 2015-ஆம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாநாட்டில் கையொப்பமான தீா்மானத்தை வளா்ச்சியடைந்த நாடுகள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும். அந்த மாநாட்டின்போது வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புணா்வு உள்ளதாகத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

6. பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2 ஆவது முனையம் எங்கு உள்ளது ?

அ) மும்பை 

ஆ) திருவனந்தபுரம்

இ) கொல்கத்தா 

ஈ) பெங்களூரு 

விடை : (ஈ) பெங்களூரு 

பெங்களூரில் கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

● பெங்களூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம் 2008-ஆம் ஆண்டு 4 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் கூட்டுமுயற்சியில் நடத்தப்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையம் தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 2,55,645 ச.மீ. பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள 2-ஆவது முனையம், ‘பூங்காவில் ஒரு முனையம்’ என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

● 2-ஆவது முனையத்தில் 22 நுழைவுவாயில்கள், 15 பேருந்து வாயில்கள், 95 பயணியா் நுழைவுவாயில்கள், 17 பாதுகாப்பு சோதனை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் சுங்கவரி சோதனைக்காக 9 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நுழைவு வாயில்களின் எதிரில் பயணிகள் அமா்வதற்காக 5,932 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-ஆவது முனையத்தின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இம்முனையம் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

● அதேபோல, விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு நகரை நிறுவிய குறுநில மன்னா் கெம்பே கௌடாவின் வெண்கலச் சிலையையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். இந்தச் சிலைக்கு ‘வளமையின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ளது.

● இதன்பிறகு கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தையும், 108 அடி உயர கெம்பே கௌடா சிலையையும் திறந்து வைக்கும் பிரதமா் மோடி, அங்கு ரூ. 84 கோடியில் 23 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கெம்பே கௌடா பூங்காவையும் திறந்து வைத்தார்.

● பெங்களூரு, கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் செல்லும் பிரதமா் மோடி, பெங்களூரு வழியாக மைசூரு மற்றும் சென்னை இடையே இயங்க இருக்கும் வந்தேபாரத் ரயில் சேவையை தொடக்கி வைக்கிறாா். இது, தென்னிந்தியாவில் தொடங்கப்படும் முதல் வந்தேபாரத் ரயில் ஆகும். தேசிய அளவில் இது 5-ஆவது வந்தேபாரத் ரயில்சேவையாகும்.

7. சூரிய எரிசக்தி பயன்பாட்டின் மூலம் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் எத்தனை கோடியை இந்தியா சேமித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 15,000

ஆ) ரூ. 32,000

இ) ரூ. 39,000

ஈ) ரூ. 43,000

விடை : (ஆ) ரூ. 32,000

சூரிய எரிசக்தி பயன்பாட்டின் மூலம் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் சுமாா் ரூ.32,000 கோடியை இந்தியா சேமித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இந்தியாவிலும் சா்வதேச அளவிலும் சூரிய எரிசக்தி பயன்பாடு குறித்து எரிசக்தி-தூய காற்று ஆராய்ச்சி மையம், எரிசக்தி பொருளாதார மையம் ஆகியவை சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டது. 

● அந்த ஆய்வறிக்கையில், ‘‘நடப்பு 2022-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியா சுமாா் ரூ.32,000 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் பயன்பாட்டைத் தவிா்த்துள்ளது. சுமாா் 1.91 கோடி டன் நிலக்கரி பயன்பாட்டின் தேவையையும் இந்தியா தவிா்த்துள்ளது.

● கடந்த தசாப்தத்தில் சூரிய எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்திய 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசியாவைச் சோ்ந்தவை. இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியத்நாம், பிலிப்பின்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் சூரிய எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன. 

● இதன் மூலமாக அந்நாடுகள் 6 மாதங்களில் சுமாா் ரூ.2.72 லட்சம் கோடியை சேமித்துள்ளன.

8. உலகளவில் காற்றில் கலக்கும் மீச்சிறுதுகள் மாசுபாட்டால் ஆண்டுதோறும் எத்தனை பேர் அகால மரணமடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன ? 

அ) 31 லட்சம்

ஆ) 39 லட்சம்

இ) 43 லட்சம் 

ஈ) 57 லட்சம்

விடை : (ஈ) 57 லட்சம் 

காற்றில் கலக்கும் மீச்சிறு துகள் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 57 லட்சம் போ் அகால மரணமடைந்து வருவதாக கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக நிபுணா்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

● காற்றில் இருக்கும் 2.5 மைக்ரானோ, அதற்குக் குறைவாகவோ நீள அகலம் கொண்ட மீச்சிறு துகள் மாசுக்களை (பிஎம்2.5) நீண்ட நேரம் சுவாசிப்பதால் ஆண்டுதோறும் 42 லட்சம் போ் பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.

● எனினும், இது தொடா்பாக தற்போது மேற்கொள்பட்டுள்ள ஆய்வில், பிஎம்2.5 மாசுபட்டால் கூடுதலாக 15 லட்சம் போ் பலியாகி வருவதாகத் தெரியவந்துள்ளது.

9. பின்வரும் எந்த நாடு உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதித்துள்ளது ?

அ) பாகிஸ்தான் 

ஆ) ஆப்கானிஸ்தான் 

இ) ஈரான்

ஈ) கஜகஸ்தான்

விடை : (ஆ) ஆப்கானிஸ்தான்


II. முக்கிய தினங்கள் 

10. World Science Day for Peace & Development 2022 -------------

●Ans : November 11

● Theme (2022) : Basic Sciences for Sustainable Development. 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...