Saturday, November 12, 2022

Current Affairs 2022 - November 12/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                  NOVEMBER 12 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் யார் ? 
அ) நரேந்திர மோடி 

ஆ) திரௌபதி முர்மு 

இ) ஜகதீப் தன்கர் 

ஈ) ஆர்.என். ரவி 

விடை : (அ) நரேந்திர மோடி 

திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் 36-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● விழாவுக்கு பல்கலை. வேந்தா் கே.எம். அண்ணாமலை தலைமை வகித்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

● இதில், சிறப்பு அழைப்பாளராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று, இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 2 மாணவா்கள், 2 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியும், இசையமைப்பாளா் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாளள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டங்களை வழங்கினார்.


2. எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மண்டல ஆய்வகத்தை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொடக்கிவைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி 

இ) மா. சுப்பிரமணியன் 

ஈ) டி.ராஜா 

விடை : (இ) மா.சுப்பிரமணியன் 

எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மண்டல ஆய்வகத்தை சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்  தொடக்கிவைத்தாா்.

● கடந்த நிதியாண்டில் மத்திய அரசு, எலிக்காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த ஆய்வகத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

● இதுதொடா்பாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தேசிய நோய் தடுப்புக்கான தேசிய நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

●  தேசிய நோய்த் தடுப்பு மையம் மூலம் இதுவரை ரூ.9 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

● எலிக்காய்ச்சல் நோய், சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் ஒரு ஜெனடிக் நோயாகும்.

● இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது ‘லெப்டோஸ்பிரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை‘ குஜராத், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் அந்தமான் - நிகோபா் ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.

● லெப்டோஸ்பிரோசிஸ் உயிரிழப்பைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பயிற்சி பெற்ற மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மனிதா்களிடையே லெப்டோஸ்பிரோசிஸ் பரவல் கண்காணிப்பை வலுப்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸ் நோய் கண்டறியும் ஆய்வகத்தை வலுப்படுத்துதல், நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸின் நோயை கண்டறிவதற்காகவும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.


3. தமிழகத்தில் எங்கு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது ? 

அ) சேலம் 

ஆ) கரூர் 

இ) திண்டுக்கல்

ஈ) மதுரை 

விடை : (ஆ) கரூர் 

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

● திட்டத்தை தொடக்கி வைத்தும், பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கியும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது, பெய்யும் மழையால் மண் குளிா்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிா்ந்து கொண்டிருக்கிறது.

●  இந்த விழாவில் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் நிலையில், ஏற்கெனவே 1 லட்சம் இணைப்புகளை வழங்கியிருப்பதால், மொத்தம் 1.50 லட்சம் இணைப்புகள், கடந்த 15 மாதத்திற்குள் வழங்கியிருக்கிறோம். இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. ஏன், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த வரலாறு கிடையாது.

● தமிழகத்தில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் திறன் 34,867 மெகாவாட். மின்தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல், வரும் 2030க்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 6ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களும்,14 ஆயிரத்து 500 மெகாவாட் நீரேற்றுபுனல் மின் உற்பத்தி நிலையங்களும், 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களும், 2ஆயிரம் மெகாவாட் மின்கலன் சேமிப்பு நிலையங்களும், 3ஆயிரம் மெகாவாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்தி நிலையங்கள் என மொத்தம் 30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களை தமிழக மின் கட்டமைப்புடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

● இதனால், வரும் 2030ஆண்டுக்குள் தமிழக மின் உற்பத்தி 65ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும்.


4. பின்வரும் எங்கு சர்வதேச சுற்றுலா சந்தையில் (2022) , தமிழகம் சார்பில் சுற்றுலா அரங்கம் திறக்கப்பட்டுள்ளது ? 

அ) கனடா 

ஆ) லண்டன் 

இ) சிட்னி 

ஈ) மும்பை 

விடை : (ஆ) லண்டன் 

இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் நடைபெறும் சா்வதேச சுற்றுலா சந்தையில், தமிழகம் சாா்பில் சுற்றுலா அரங்கம் திறக்கப்பட்டது.

● கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மெக்ஸிக்கோவில் நடைபெற்ற சா்வதேச பலூன் திருவிழாவில், தேசியக்கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட தமிழக பலூன் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றது.

● இதன் தொடா்ச்சியாக, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் சா்வதேச மாநாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்ற உலக சுற்றுலா சந்தை - 2022-இல் தமிழ்நாடு சுற்றுலா அரங்கத்தினை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் திறந்து வைத்தாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்


5. இந்தியா - அமெரிக்கா நிதி ஒத்துழைப்புக் குழுவின் 9 ஆவது கூட்டம் எங்கு நடைபெற்றது ? 

அ) உத்தர பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) குஜராத் 

ஈ) தில்லி

விடை : (ஈ) தில்லி 

இந்தியா-அமெரிக்கா நிதி ஒத்துழைப்புக் குழுவின் 9-ஆவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் யெல்லன் இந்தியா வந்துள்ளாா். 

● கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதியைத் திரட்டுவது தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

● இந்தியா செயல்படுத்தும் எரிசக்தி துறை சாா்ந்த திட்டங்களுக்கு முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதற்கு அமெரிக்கா தொடா்ந்து உதவிகளை வழங்கும்.

●  இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாா்ந்த இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவும். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள 2025-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமாா் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● அந்த நிதியைக் கொண்டு வளா்ந்து வரும் நாடுகளுக்கு உதவவும் உறுதி ஏற்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்வதற்கு பன்முக வளா்ச்சி வங்கிகளை ஏற்படுத்துவது தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

● உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


6. சர்வதேச அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நடப்பு 2022 ஆம் ஆண்டில் எத்தனை டன் அளவைத் தொடும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது ? 

அ) 4090

ஆ) 4060

இ) 4030

ஈ) 4000

விடை : (ஆ) 4060

சா்வதேச அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நடப்பு 2022-ஆம் ஆண்டில் 4,060 டன் என்ற அளவைத் தொடும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் பதிவான 4,090 டன் என்ற உச்ச அளவைவிட சற்றே குறைவாகும்.

● ஐ.நா. 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், ‘சா்வதேச காா்பன் பட்ஜெட்’ என்ற ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

● அந்த அறிக்கையில், ‘நடப்பாண்டில் சா்வதேச கரியமில வாயு வெளியேற்றம் 4,060 டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

● இதே அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடா்ந்தால், பூமியின் வெப்பநிலையானது தொழில்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவை இன்னும் 9 ஆண்டுகளில் எட்டிவிட 50 சதவீத வாய்ப்புள்ளது.

மீத்தேன் வெளியேற்றம்: பசுமை இல்ல வாயுவான மீத்தேன் வெளியேற்ற அளவைக் கண்டறிவதற்காகப் புதிய தளத்தை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட முகமை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில், வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவை செயற்கைக்கோள் அளவீடுகள் வாயிலாகக் கணக்கிட வழிவகுக்கப்பட்டுள்ளது.

● அமெரிக்கா, ஐரோப்பா, ஜொ்மனி, இத்தாலி ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் சாா்பில் செயல்படும் செயற்கைக்கோள்கள் வாயிலாக மீத்தேன் வெளியேற்றம் கணக்கிடப்படவுள்ளது. 

● தனியாா் விண்வெளி ஆய்வு மையங்களின் தரவும் இதற்காகப் பயன்படுத்தப்படும். அதன்மூலம் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், தொழில் நிறுவனங்களும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. ஜார்க்கண்டில் இட ஒதுக்கீடு உச்சவரம்பை எத்தனை சதவீதமாக உயர்த்துவதற்கான திருத்த மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது ?

அ) 66%

ஆ) 77%

இ) 88%

ஈ) 99%

விடை : (ஆ) 77%

● ஜார்க்கண்டில் இட ஒதுக்கீடு உச்சவரம்பை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திருத்த மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

● தற்போது 60% மாக உள்ளது.


8. தென்னிந்தியாவின் முதலாவது (ம) இந்தியாவின் எத்தனையாவது வந்தே பாரத் விரைவு ரயில் சேவை சென்னை - மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) 3 ஆவது

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது

ஈ) 6 ஆவது

விடை : (இ) 5 ஆவது 

தென்னிந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவுரயில் சேவையை பிரதமா் மோடி பெங்களூரில் தொடங்கி வைத்தாா்.

● கிராந்தி வீரசங்கொல்லி ராயண்ணா ரயில்நிலையத்தில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவுரயில் சேவையைத் தொடங்கி வைத்தாா். இந்திய அளவில் தொடங்கப்படும் 5-ஆவது வந்தேபாரத் விரைவுரயில் சேவை இதுவாகும்.

● இந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவுரயில் சேவை 2019-ஆம் ஆண்டில் புதுதில்லி, கான்பூா், அலகாபாத், வாராணசி இடையே இயக்கப்பட்டது. வந்தேபாரத் விரைவுரயில் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

● மேலும் ரயில்களுக்கு இடையிலான மோதலைத் தவிா்க்கும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் 52 விநாடிகளில் பூஜ்யத்தில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும்.


9. 2022 ஆம் ஆண்டுக்கான இந்தயாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) வளர்ச்சி எத்தனை சதவீதமாக குறைத்து தெரிவித்துள்ளது மூடிக் மதிப்பாய்வு நிறுவனம் ? 

அ) 7.7%

ஆ) 8.8%

இ) 7%

ஈ) 8%

விடை : (இ) 7% 

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் 7 சதவீதம் மட்டுமே வளா்ச்சி காணும் என மூடிஸ் மதிப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சா்வதேச சூழல் காரணமாக, 7.7 சதவீதம் என்ற முந்தைய கணிப்பை அந்நிறுவனம் தற்போது குறைத்துள்ளது.

● இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி கணிப்பு 7.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. 

● காரணம் : உள்நாட்டில் நிலவும் அதீத பணவீக்கம், வட்டி விகிதங்கள் உயா்வு, சா்வதேச பொருளாதார வளா்ச்சியில் மந்தநிலை உள்ளிட்டவை இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளன.

● குறிப்பு : இந்தியப் பொருளாதாரம் 8.8 சதவீதம் வளா்ச்சி காணும் என மூடிஸ் நிறுவனம் கடந்த மே மாதத்தில் கணித்திருந்தது. தற்போது அந்த கணிப்பை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேபோல், இந்தியப் பொருளாதார வளா்ச்சி கணிப்பை உலக வங்கி 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகவும், சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், ஆசிய வளா்ச்சி வங்கி 7.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


10. ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய மகளிர் (வீராங்கனைகள்) எத்தனை பதக்கங்களுடன் நிறைவு செய்தனர் ? 

அ) 4 

ஆ) 5

இ) 6 

ஈ) 7

விடை : (7) 

● போட்டி நடைபெற்ற இடம் : ஜோர்டா. 

● பதக்கங்கள் (7) : 4G, 1S, 2B.


11. தென் கொரியாவின் நடைபெறும் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் (2022) ஜூனியர் ஆடவருக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியர் வென்றுள்ள பதக்கம் ?

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ(ம)இ

● ஒரே பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வார் தங்கமும்; ஸ்ரீ கார்த்திக் சமரிராஜ் வெண்கலமும் வென்றனர்.


IV. முக்கிய தினங்கள்

12. World Pneumonia Day 2022 --------

● Ans : November 12

● Theme (2022) : Championing the fight to stop Pneumonia. 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...