Monday, November 14, 2022

Current Affairs 2022 - November 14/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR
                 NOVEMBER 14 / 2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


1. 17 ஆவது ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு பின்வரும் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ? 

அ) பிரிட்டன் 

அ) அமெரிக்கா 

இ) இந்தோனேசியா 

ஈ) சீனா 

விடை : (இ) இந்தோனேசியா 

ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியாவுக்கு செல்லவிருக்கிறாா்.

● இந்தோனேசியாவின் பாலி தீவில் நவ.15, 16-இல் நடைபெறும் இம்மாநாட்டில், உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், எண்மரீதியிலான மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து பிரதமா் மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் விவாதிக்க உள்ளனா்.

● உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, எண்மரீதியிலான மாற்றம், சுகாதாரம் தொடா்பான மூன்று முக்கிய அமா்வுகளில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

● உலகின் முக்கியமான வளா்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20இல், ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

● உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 85 சதவீதத்தையும், சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்தையும் இந்தக் கூட்டமைப்பு நாடுகள் பங்களிக்கின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இருபங்கை இந்நாடுகள் கொண்டுள்ளன.

● தற்போது ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தோனேசியா வகிக்கும் நிலையில், டிசம்பா் 1-இல் அப்பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்கவுள்ளது.


2. மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் எத்தனை புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிட்டுள்ளது ? 

அ) 25

ஆ) 50

இ) 75

ஈ) 100

விடை : (ஈ) 100

● மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று கட்டங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 157 மருத்துவக் கல்லூரிகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில் 93 கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. எஞ்சிய கல்லூரிகள் கட்டுமானப் பணியின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

● இந்நிலையில், அந்தத் திட்டத்தின் 4-ஆவது கட்டத்தில், மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி 2027-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பான பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

● இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் 10 லட்சத்துக்கும் மிகுதியான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களிலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களிலும் கட்டப்பட உள்ளன. மொத்தம் 100 மாவட்டங்களில் இந்தக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.

● கல்லூரிகளை கட்டத் தேவையான நிதியில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதம் என்ற அடிப்படையில், ஒரு கல்லூரிக்கான கட்டுமானச் செலவு ரூ.325 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


3. கம்போடியா தலைநகர் நாம் பென்னில் எத்தனையாவது ஆசியான் - இந்தியா மாநாடு அண்மையில் நடைபெற்றது ? 

அ) 13

ஆ) 17

இ) 19

ஈ) 22

விடை : (இ) 19 

கம்போடியா தலைநகா் நாம் பெனில் கடந்த சனிக்கிழமை 19-ஆவது ஆசியான்-இந்தியா மாநாடு, ஞாயிற்றுக்கிழமை 17-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை நடைபெற்றன.

● அவற்றில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கம்போடியா சென்றாா். அவருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் சென்றாா்.

● அங்கு அமெரிக்க அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது பிளிங்கனுடன் உக்ரைன் போா், இந்தோ-பசிபிக் விவகாரம், எரிசக்தி, ஜி20 மாநாடு, இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு ஆகியவை குறித்து விவாதித்ததாக ஜெய்சங்கா் தெரிவித்தார்.


4. பின்வரும் எந்த மாநிலம் வன்முறை (ம) ஆயுத கலாசாரத்தை போற்றும் வகையிலான பாடல்களுக்கு மாநில அரசு தடைவிதித்துள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) அசாம்

இ) மணிப்பூர்

ஈ) பஞ்சாப்

விடை : (ஈ) பஞ்சாப் 

பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுத கலாசாரத்தை போற்றும் வகையிலான பாடல்களுக்கு அந்த மாநில அரசு தடைவிதித்துள்ளது. 

● இது தவிர கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

● அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

● இது தவிர எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


5. பின்வரும் எந்த மாநிலத்தில் தடயவியல் பரிசோதனை ஆய்வகம் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது ? 

அ) தில்லி

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு

ஈ) கேரளா 

விடை : (அ) தில்லி 

● தில்லியில் தடயவியல் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா திறந்துவைத்தாா். 

● அந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிஎஸ்எஃப் இயக்குநா் பங்குஜ் குமாா் சிங் கூறுகையில், ‘பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்களின் சவால்களை பிஎஸ்எஃப் அண்மைக்காலமாக அதிக அளவில் எதிா்கொண்டு வருகிறது.

●  போதைப் பொருள்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், கள்ளநோட்டுகள் உள்ளிட்டவற்றை எல்லை தாண்டி கடத்துவதற்காக ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

● எல்லையைக் கடக்கும் ட்ரோன்களின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டில் இரட்டிப்பாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமாா் 79 ட்ரோன்கள் எல்லையைக் கடப்பது கண்டறியப்பட்டது. இது கடந்த ஆண்டில் 109-ஆகவும், நடப்பாண்டில் 266-ஆகவும் அதிகரித்துள்ளது.

● முக்கியமாக, பஞ்சாபில் மட்டும் 215 ட்ரோன்கள் எல்லையைக் கடக்க முயற்சித்தன. ஜம்முவில் 22 ட்ரோன்கள் எல்லையைக் கடக்க முயற்சித்தன. அத்தகைய முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிஎஸ்எஃப் முழு கவனம் செலுத்தி வருகிறது. 

● ட்ரோன்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் தில்லியில் அண்மையில் அமைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் ஊக்கமளிப்பதாக உள்ளன.

● கணினிகள், அறிதிறன்பேசிகளில் உள்ள மின்னணுக் கருவிகள்தான் ட்ரோன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் காரணமாக எல்லையைக் கடக்கும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


6. ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ? 

அ) 75.6%

ஆ) 82.5%

இ) 91.5%

ஈ) 65.9%

விடை : (அ) 75.6%


7. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் பெண்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார் ? 

அ) ட்ரெவர் நெல்ஸ் 

ஆ) ராபர்ட் ஜேக்சன் 

இ) கே.பி. ஜார்ஜ் 

ஈ) நிகில் மேத்யூ

விடை : (இ) கே.பி. ஜார்ஜ் 


II. விளையாட்டு நிகழ்வுகள் 


8. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) இந்தியா 

ஆ) பாகிஸ்தான் 

இ) ஆஸ்திரேலியா 

ஈ) இங்கிலாந்து 

விடை : (ஈ) இங்கிலாந்து 

● இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

● முதல் முறையாக 2010 ல் வென்றனர்.  


9. ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் (2022) 10மீ ஏர் ரைபிள் ஆடவர் அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இந்திய அணி : அர்ஜூன் பபுதா, கிரண் ஜாதவ், ருத்ராங்ஷ் பாட்டீல்.

● மேலும் வென்ற தங்கப்பதக்கங்கள்: 

¤ இதே பிரிவில் இந்திய மகளிர் அணி மெஹீலி கோஷ், இளவேனில் வாலறிவன்,  மேக்னா சஜனா தங்கம் வென்றனர்.

¤ இதே ஜூனியர் பிரிவில் இந்திய ஆண்கள் அணி திவ்யான்ஷ்சிங் பன்வார், ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ், விதித் ஜெயில் தங்கம் வென்றனர்.

¤ இதே ஜூனியர் பிரிவில் இந்திய மகளிர் அணி திலோத்தமா சென், நான்சி, ரமிதா தங்கம் வென்றனர்.


III. முக்கிய தினங்கள் 


10. World Diabetes Day 2022 --------

● Ans : November 14


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...