Thursday, November 17, 2022

Current Affairs 2022 - November 17/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                  NOVEMBER 17/2022


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

தமிழகத்தில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா எங்கு நடைபெற்றது ? 

அ) சேலம்

ஆ) மதுரை

இ) சென்னை 

ஈ) காஞ்சிபுரம் 

விடை : (ஈ) காஞ்சிபுரம் 

● குறிப்பு : நாட்டிலேயே தமிழகம்தான் உணவு உற்பத்தியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 

● கடந்த 1904-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் முதல் முதலில் உருவாக்கப்பட்டது. 

● தொடா்ந்து, அதே ஆண்டில் நாட்டிலேயே முதல் முதலாக காஞ்சிபுரத்தில் முதல் நகரக் கூட்டுறவு வங்கியும் தொடங்கப்பட்டது. 

● கூட்டுறவு இயக்க முன்னோடி மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்கிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. நீதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) வி.கே. சரஸ்வத் 

ஆ) அரவிந்த் விர்மாணி 

இ) வி.கே. பால் 

ஈ) ரமேஷ் சந்த் 

விடை : (ஆ) அரவிந்த் விர்மாணி 

நீதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் அரவிந்த் விா்மாணி நியமிக்கப்பட்டாா்.

● பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான பொருளாதார ஆலோசனைக் குழுவான நீதி ஆயோக்கில் தற்போது வி.கே. சரஸ்வத் , ரமேஷ் சந்த் மற்றும் வி.கே. பால் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.


3. இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக தனியார் புத்தாக்க நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டின் பெயர் ? 

அ) விக்ரம் - எஸ்

ஆ) விக்ரம் - எல்

இ) கலாம் - எஸ்

ஈ) கலாம் - எல் 

விடை : (அ) விக்ரம் - எஸ் 

இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் புத்தாக்க நிறுவனம் வடிவமைத்த ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை (நவ.18) விண்ணில் ஏவப்படவுள்ளது. 

● சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.

● உலகளாவிய விண்வெளி வா்த்தகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், விண்வெளி ஆய்வில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

●  இதற்காக 2020-ஆம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள தனியாா் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

● அதன்படி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த ‘ஸ்கைரூட்’ எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. புதிய ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தது.

● தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய மூன்று வித ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ’விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.

● அதில், அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடிய ‘விக்ரம்- எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. 

● அதன்படி கடந்த நவ. 15-ஆம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

● இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் இந்த ராக்கெட்டுடன் சோ்த்து அனுப்பப்படவுள்ளன.

● அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. 

● இதைத் தொடா்ந்து, பல்வேறு தனியாா் புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.


4. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா என்று முதல் அதிகாரபூர்வமாக ஏற்கவுள்ளது ? 

அ) டிசம்பர் 01,2022

ஆ) ஜனவரி 01,2023

இ)பிப்ரவரி 01,2023

ஈ) மார்ச் 01,2023 

விடை : (அ) டிசம்பர் 01, 2022

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

● இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்தியாவிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

● ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.

● ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தார். கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்கவுள்ளது.

● ஜி 20 நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20   கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம் என்று பேசினார்.


5. இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் எத்தனை நுழைவு இசைவு (விசா) வழங்கும் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் தொடக்கி வைத்தார் ? 

அ) 1000

ஆ) 2000

இ) 3000

ஈ) 4000

விடை : (இ) 3000

இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 நுழைவு இசைவு (விசா) வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

● பதினெட்டு முதல் முப்பது வயது வரையிலான இந்திய பட்டதாரிகள் 2 ஆண்டுகள் தங்கி பணியாற்ற ஆண்டுதோறும் 3,000 விசாக்களை பிரிட்டன் வழங்க உள்ளது.

● இதேபோல பிரிட்டனைச் சோ்ந்தவா்களுக்கு இந்தியாவும் விசா அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமானது.

● இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முறைப்படி நடைமுறைக்கு வரவுள்ளது.

● இந்த புதிய விசா திட்டம் மூலம் பயனடைய உள்ள முதல் நாடாக இந்தியா உள்ளது என்று பிரிட்டன் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.


6. கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக (முதலிடம்) எந்த நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பணிகள் இந்தியா வந்துள்ளன ? 

அ) வங்கதேசம் 

ஆ) அமெரிக்கா 

இ) பிரிட்டன் 

ஈ) கனடா 

விடை : (ஆ) அமொிக்கா 

கடந்த 2021-இல் வெளிநாட்டைச் சேர்ந்த 15.24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். 

● இவர்களில் அதிகபட்சமாக அமெரிக்காவிலிருந்தும், அதற்கடுத்து வங்கதேசத்திலிருந்தும் வந்துள்ளனர்.
 கரோனா பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகள், விசா விதிமுறைகளில் கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டிருந்தப்போதிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
 

● இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு இந்தியா வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 74.39 சதவீதம் பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள். மீதம் 25.61 சதவீதம் பேர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

● கடந்த ஆண்டு ஜன.1-ஆம் தேதிமுதல் டிச. 31-ஆம் தேதிவரை மொத்தம் 15 லட்சத்து 24 ஆயிரத்து 469 பேர் இந்தியா வந்துள்ளனர்.
 அவர்களில் முறையே அமெரிக்காவிலிருந்து 4,28,860 பேரும், வங்கதேசத்திலிருந்து 2,40,554 பேரும், பிரிட்டனிலிருந்து 1,64,143 பேரும், கனடாவிலிருந்து 80,437 பேரும், நேபாளத்திலிருந்து 5,32,544 பேரும் இந்தியா வந்துள்ளனர்.
 

● அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து 36,451 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 33,864 பேரும், ஜெர்மனியிலிருந்து 33,772 பேரும், போர்ச்சுகலில் இருந்து 32,064 பேரும், பிரான்ஸிலிருந்து 30,374 பேரும் இந்தக் காலகட்டத்தில் இந்தியா வந்துள்ளனர்.


7. நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடியாக ஒரு விண்வெளிக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள அமைப்பு/நிறுவனம் ? 

அ) நாசா

ஆ) இஸ்ரோ

இ) ஸ்பேஸ் எக்ஸ்

ஈ) ஐஎஸ்எஸ்

விடை : (அ) நாசா 

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக ஒரு விண்வெளிக் கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது.

● ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து அதிக சக்தி கொண்ட ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் அனுப்பப்பட்டுள்ளது.

● ‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

● அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. 

● அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.


8. 2023 ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (சிசிபிஐ) தரவரிசையில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) 5 ஆவது

ஆ) 6 ஆவது

இ) 7 ஆவது

ஈ) 8 ஆவது

விடை : (ஈ) 8 ஆவது 

பருவநிலை பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா 2 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடம் பிடித்துள்ளது.

● பருவநிலையை பாதுகாப்பதில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 59 நாடுகளின் செயல்திறனை ஜொ்மன்வாட்ச், நியூ கிளைமேட் இன்ஸ்டிட்யூட், கிளைமேட் ஆக்ஷன் நெட்வொா்க் ஆகிய 3 அரசுசாரா அமைப்புகள் பின்தொடா்ந்து வருகின்றன. அந்த அமைப்புகள் 2023-ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (சிசிபிஐ) தரவரிசையை திங்கள்கிழமை வெளியிட்டன.

● 2030-ஆம் ஆண்டுக்குள் தங்கள் கரியமில வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைப்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்தத் தரவரிசையில், இந்தியா 2 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடம் பிடித்துள்ளது.

● கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் போன்ற பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி பயன்பாடு, பருவநிலை கொள்கை ஆகிய 4 பிரிவுகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

● எந்தவொரு நாடும் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படுவதில்லை என்பதால், தரவரிசையின் முதல் 3 இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

● அதன்படி, 4-ஆவது இடத்தை டென்மாா்க், 5-ஆவது இடத்தை ஸ்வீடன், 8-ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளன. சீனா 51-ஆவது இடத்தையும், அமெரிக்கா 52-ஆவது இடத்தையும், ரஷியா 59-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

● 2030-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இலக்கு நிா்ணயித்துள்ள இந்தியா, அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

● அதேவேளையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது என்று 3 அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

● இதனிடையே பருவநிலை நிபுணா்கள் கூறுகையில், ‘உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத நிலக்கரிக்கு 9 நாடுகள் மட்டுமே பொறுப்பாக உள்ளன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. 

● 2030-ஆம் ஆண்டுக்குள் தனது எண்ணெய், எரிவாயு உற்பத்தியை 5 சதவீதத்துக்கு மேல் உயா்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி சதவீதமாக குறைக்க பாரீஸில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு முரண்பாடாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


9. 22 ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) நெதர்லாந்து 

ஆ) அமெரிக்கா 

இ) ஈரான் 

ஈ) கத்தார் 

விடை : (ஈ) கத்தார்

● இப்போட்டி வரும் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...