Sunday, November 20, 2022

Current Affairs 2022 - November 20/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 NOVEMBER 20 / 2022


I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


1. காசி - தமிழ் சங்கமம் எனும் பெயரில் ஒரு மாத கால நிகழ்ச்சியை வாரணாசியில் (காசி) தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின் 

ஆ) நரேந்திர மோடி 

இ) திரௌபதி முர்மு 

ஈ) யோகி ஆதித்யநாத்

விடை : (ஆ) நரேந்திர மோடி 

நாட்டின் புராதன பகுதியான காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பழைமையான தொடா்புகளைக் கொண்டாடும் நோக்கத்துடன் ‘காசி- தமிழ் சங்கமம்’ எனும் பெயரில் ஒரு மாத கால நிகழ்ச்சிகள் வாராணசியில் (காசி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

● இந்நிகழ்ச்சிகளை, வாராணசியில் பிரதமா் மோடி சனிக்கிழமை ( 19/11/2022) முறைப்படி தொடக்கி வைத்தார்.

2. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களை எத்தனை சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 60%

ஆ) 50%

இ) 40%

ஈ) 30%

விடை : (இ) 40% 

சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

● தேசிய நெடுஞ்சாலை திருத்தப்பட்ட கட்டணத் திட்ட சட்டத்தின் மூலம் தற்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

●  இதில் பொது நிதித் திட்டம் மூலம் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் 40 சதவீதம் வரையில் குறையும்.

●  இது ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. மத்திய அரசு பின்வரும் எத்தனை சதவீதக்கு கீழான எஃகு மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது ? 

அ) 60%

ஆ) 59%

இ) 58%

ஈ) 57%

விடை : (இ) 58% 

எஃகு மீதான ஏற்றுமதி வரியை சனிக்கிழமை முதல் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

● இது எஃகு தொழில் துறையை மேம்படுத்தவும், எஃகு ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘58% இரும்பு உள்ளடக்கத்துக்கு குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாது துகள்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

● ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

● 58 சதவீதத்துக்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.

● இரும்புத் தாது துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது. ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி, ஃபெரோனிகல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும். கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும். இதன்மூலம் 2022, மே 22-க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பது தொடர்பாக எங்கு இரண்டு நாள் பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) உத்தரபிரதேசம் 

இ) அசாம்

ஈ) தில்லி 

விடை: (ஈ) தில்லி 

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் அமைச்சா்கள் மாநாடு சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதில் 75 நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளைச் சோ்ந்த 450-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

● மாநாட்டில், பயங்கரவாதத்தை முறியடிக்க சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உளவுத் தகவல்களை நாடுகள் வெளிப்படையாக பகிா்ந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

● மேலும், மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் (என்எம்எஃப்டி) தனித்துவமான இந்த முன்னெடுப்பை நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதற்கென நிரந்தர செயலகம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

● குறிப்பு : இந்நிலையில், இந்த நிரந்தர செயலகம் இந்தியாவிலேயே அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசு மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.

5. இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் ? 

அ) அருண் கோயல் 

ஆ) கோயல் சிங் 

இ) அனுப் சந்திர பாண்டே

ஈ) சந்திர சூட் 

விடை : (அ) அருண் கோயல் 

● இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். 

மேலும் மற்றொரு தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தேர்தல்ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆன, கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார். விருப்ப ஓய்வின் கீழ் அண்மையில் அவர் ஓய்வு பெற்றார்.

● இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

6. பின்வரும் எந்த மாநிலத்தில் முதல் பசுமை விமான நிலையம் (ம) கமெங் நீர்மின் நிலைய திட்டங்களை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தவர் யார் ? 

அ) ஜார்க்கண்ட் 

ஆ) அருணாசலப் பிரதேசம் 

இ) கேரளா

ஈ) கோவா 

விடை : (ஆ) அருணாச்சல பிரதேம் 

● அருணாசல பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் பசுமை விமான நிலையம் மற்றும் கமெங் நீா்மின் நிலைய திட்டங்களை சனிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்த பிரதமா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

● அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் புதிய ‘டோனி போலோ விமான நிலையம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமா் அடிக்கல் நாட்டிய நிலையில், அதனை தற்போது பயன்பாட்டுக்கு பிரதமா் திறந்துவைத்தாா்.

●  இந்த விமான நிலையத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையக் கட்டடங்களும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன. 

● விமானப் போக்குவரத்து மூலமாக அருணாசல பிரதேசத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதிலும், அருணாசல பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளை ஹெலிகாப்டா் சேவை மூலமாக இணைப்பதிலும் இந்த விமான நிலையம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

● இந்த விமான நிலையம் ரூ. 645 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

● அதுபோல, மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் ரூ. 8,450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கமெங் நீா்மின் நிலையத்தையும் பிரதமா் மோடி சனிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

7. திபெத்திய பௌத்த மத குரு தலாய் லாமாவுக்கு மகாத்மா காந்தி - மண்டேலா விருது வழங்கி கௌரவித்த ஆளுநர் யார் ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

இ) பன்வாரிலால் புரோகித் 

ஈ) இல. கணேசன் 

விடை : (ஆ) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். 

●  திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருதை ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை வழங்கி கெளரவித்தாா்.

● அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சா்வதேச தலைவா்களுக்கு தா்மசாலாவில் செயல்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.


II. விளையாட்டு நிகழ்வுகள்:

8. ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் (2022) இந்தியாவின் மனிகா பத்ரா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம்

● இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...