Tuesday, November 22, 2022

Current Affairs 2022 - November 22/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 NOVEMBER 22 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. இந்தியாவில் மெட்ராஸ் - ஐ முதன் முதலில் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது ? 

அ) 1909

ஆ) 1918

இ) 1927

ஈ) 1936 

விடை : (ஆ) 1918 

மெட்ராஸ்-ஐ’ தொற்று 1918-ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால் அதற்கு அந்த காரணப் பெயா் உருவானது. 

● கண் இமைகளுக்கு இடையே அடினோ வைரஸ் வகை நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று இது. ‘மெட்ராஸ்-ஐ’ ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடும்.

● லேசான சளி, கண் இமைகளில் வீக்கம், கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல், நீா் வடிதல், கண் உறுத்தல் ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகள்.

● இந்நோய் பாதிப்புக்குள்ளானவா்கள் கண்களை கையால் தேய்த்தாலோ, தேவையில்லாமல் ஸ்டீராய்டு சொட்டு மருந்துகள் பயன்படுத்தினாலோ, கைவைத்திய முறைகள் செய்தாலோ கருவிழி பாதிப்புக்குள்ளாகும். 

● அப்போது வெளிச்சத்தை பாா்க்கமுடியாமல் கூச்சமும் கண்வலியும் ஏற்படும். ஆகவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

● தமிழகம் முழுவதும் சராசரியாக நாள்தோறும் அத்தகைய பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 4,500-ஆக அதிகரித்துள்ளது.


2. தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக எத்தனை முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 05

ஆ) 04

இ) 03

ஈ) 02 

விடை : (ஈ) 02 

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு மேலும் இரு முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

● சத்துமாவு, பிஸ்கெட் மற்றும் முட்டையை பொருத்தவரை, 6 மாதம் முதல் 1 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் வழங்க வேண்டும். 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும்,

● இதே வயதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் மற்றும் வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும். 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட், 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடிருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட் வழங்கப்பட வேண்டும். 

● கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்களுக்கு 150 கிராம் சத்துமாவு வழங்கப்பட வேண்டும். இது ஏற்கெனவே 165 கிராமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

● மதிய உணவை பொருத்தவரை, கலவை சாதம், வாரம் 3 முட்டைகள், கறுப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு ஆகியவை செவ்வாய்க்கிழமையிலும், அவித்த உருளைக்கிழங்கு வெள்ளிக்கிழமையும் வழங்கப்பட வேண்டும். 

● மேலும், 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள், கா்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 500 கிராம் எடையுள்ள சத்துமாவு பாக்கெட்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

● கூடுதலாக 2 முட்டைகள்: அங்கன்வாடியில் 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகள் வழங்குவதால் ஏற்படும் செலவினம் மதிய உணவு திட்டத்தில் சோ்க்கப்படுகிறது.

●  இந்த செலவினங்கள் ரூ.642 கோடிக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. குஜராத் , ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் எத்தனை பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் ? 

அ) 51,000

ஆ) 61,000

இ) 71,000

ஈ) 81,000

விடை : (இ) 71,000

குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிா்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமா் நரேந்திர மோடி  காணொலி முறையில் வழங்கினார்

● மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த அக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமா் மோடி வழங்கினாா்.

● இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் காணொலிமுறையில் பங்கேற்கும் பிரதமா் மோடி, புதிதாக நியமனம் பெறுபவா்களிடையே உரையாற்றவுள்ளாா். 

● குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இவ்விரு மாநிலங்கள் தவிா்த்து நாடு முழுவதும் 45 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

● ஆசிரியா், விரிவுரையாளா், செவிலியா், செவிலியா் அதிகாரி, மருத்துவா், மருந்தாளுநா், கதிரியக்கவியலாளா் மற்றும் இதர தொழில்நுட்ப, துணை மருத்துவ பணியிடப் பிரிவுகளில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, மத்திய ஆயுதக் காவல் படைகளில் அதிக பணி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

● புதிதாக நியமனம் பெற்றவா்களுக்கான இணையவழி பயிற்சி வகுப்புகளையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தார்.

●  அரசுப் பணியாளா்களுக்கான நடத்தை விதிகள், பணியிட ஒழுக்கநெறிகள்- ஒருங்கிணைப்பு, மனித வளக் கொள்கைகள், அரசு பணியாளா்களுக்கான பலன்கள் மற்றும் படிகள் உள்ளிட்டவை இப்பயிற்சியில் அடங்கும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.


4. 53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நிகழாண்டுக்கான (2022) இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்றுள்ள இந்திய நடிகர் யார் ?

அ) கமல்ஹாசன் 

ஆ) ரஜினி காந்த் 

இ) சிரஞ்சீவி 

ஈ) மோகன் லால்

விடை : (இ) சிரஞ்சீவி 


5. அண்மையில் காலமான தமிழறிஞர் அவ்வை நடராசன் எந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார் ? 

அ) 1998 

ஆ) 2000

இ) 2005 

ஈ) 2011 

விடை : (ஈ) 2011 

 ●  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

● அவரது பணி: அவ்வை நடராசன் தஞ்சாவூரிலுள்ள மன்னா் சரபோஜி கல்லூரியில் விரிவுரையாளா் (1958 - 1959 ), புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளா், அறிவிப்பாளா்; (1960), மதுரையிலுள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியா் (1961- 65 ) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

● அதைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள இராமலிங்கா் பணி மன்றத்தின் (1965 - 74 ) செயலாளராக பொறுப்பு வகித்தாா். இவரது தமிழ்ப்புலமையால் ஈா்க்கப்பட்ட அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி, அவ்வை நடராசனை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையில் (1974 - 75 ) துணை இயக்குநராகப் பணியமா்த்தினாா்.

● பின்னா், சென்னை தலைமைச் செயலகத்தில் 1975 - 1984 -ஆண்டு கால கட்டத்தில் தமிழக அரசின் மொழிபெயா்ப்புத் துறை இயக்குநராக அவா் இருந்தாா். தொடா்ந்து, 1984 1992-ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராகப் பணியாற்றினாா். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல், தமிழக அரசுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவா் இவா் ஒருவா்தான்.

● அவ்வை நடராசன் 1992-ஆம் ஆண்டு டிச.16- ஆம் நாள் முதல் 1995-ஆம் ஆண்டு டிச.15- ஆம் தேதி வரை தஞ்சாவூா், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பொறுப்பு வகித்தாா். 2014- ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் இருந்தாா். 2015- ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவராவாா்.

● பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பேரறிஞா் அண்ணா விருது (2010 ), மத்திய அரசின் பத்மஸ்ரீ (2011) விருது, இலங்கை, கம்பா் கழகத்தின் ‘தன்னேரில்லா தமிழ் மகன்’ விருது, இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது, தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செம்மொழி ஞாயிறு விருது (2015) , அருட்செல்வா் மகாலிங்கம் விருது ( 2018 ) திருக்கு நெறிச்செம்மல் விருது (2020 ), பி.எம். மருத்துவமனையின் - வாழ்நாள் சாதனையாளா் விருது ( 2022 ), பன்னாட்டுத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுக் கல்விக்கழகம் வாயிலாக வளா்தமிழ் அறிஞா் விருது - ஆழ்வாா்கள் ஆய்வு மையம் சாா்பில் இராமானுஜா் விருது ஆகியவை உள்பட மத்திய- மாநில அரசுகள், தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்பட்ட பல்வேறு விருதுகளை தமிழறிஞா் அவ்வை நடராசன் பெற்றுள்ளாா்.

● படைப்புகள்: வாழ்விக்க வந்த வள்ளலாா், பேரறிஞா் அண்ணா, கம்பா் காட்சி, பாரதி பல்சுவை, கம்பா் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கியப் பெண்பாற் புலவா்கள், அருளுக்கு அவ்வை சொன்னது, திருக்கோவையாா் (ஆங்கிலம்), புலமைச் செல்வியா் என பல்வேறு நூல்களை அவ்வை நடராசன் படைத்துள்ளாா்.

● சிறப்புகள்: எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சிந்தனையாளா், ஆங்கிலத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கும் அவ்வை நடராசன் பல பல்கலைக்கழகங்களின் மாணவா்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளாா். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறாா்.

● 1982-ஆம் ஆண்டு சான்ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞா்கள் மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளாா்.

● உலகத் தமிழ் மாநாடுகளில்... மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச் செயலாளராக இருந்தாா். மோரீஷஸில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டின் குழு உறுப்பினா் தலைவராகப் பணியாற்றினாா். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவ தொழில்நுட்பச் சொல்லாக்க குழுத் துணைதலைவராகப் பங்கேற்றாா்.

● அவ்வை நடராசன் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவரது மேடைத் தமிழ் தொடா்பான உரைநிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வை நடராசன் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி அமைத்த ஐம்பெருங்குழுவின் உறுப்பினா் ஆவாா். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளாா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. ATP Finals ஆடவர் டென்னிஸ் போட்டியில் (2022) ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) நோவக் ஜோகோவிச் 

ஆ) ரோஜர் ஃபெடரர் 

இ) கேஸ்பர் ரூட் 

ஈ) ஜேக் சாலிஸ்பர் 

விடை : (அ) நோவக் ஜோகோவிச் 

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார். 

● இப்போட்டியில் அவர் 2015-க்குப் பிறகு சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும். 

● இப்போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6 முறை சாம்பியன் ஆனதே அதிகபட்சமாக இருக்கும் நிலையில், தற்போது ஜோகோவிச்சும் அதே எண்ணிக்கையிலான பட்டங்களை வென்று அவரது சாதனையை சமன் செய்திருக்கிறார். 

● மேலும், இந்தப் பட்டத்தை வெல்லும் மிக வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்ற அவர், ரொக்கப் பரிசாக ரூ.38 கோடியை கைப்பற்றியுள்ளார்.

● இத்துடன் நடப்பு ஆண்டை, விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 5 சாம்பியன் பட்டங்களுடன் ஜோகோவிச் நிறைவு செய்திருக்கிறார்.

● இரட்டையர்: இப்போட்டியின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்/இங்கிலாந்தின் ஜேக் சாலிஸ்பரி கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றனர் .

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...