Wednesday, November 23, 2022

Current Affairs 2022 - November 23 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 NOVEMBER 23/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் (2022) எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ? 

அ) 7 

ஆ) 8

இ) 9

ஈ) 10

விடை : (ஈ) 10 

தமிழ் எழுத்தாளா்களை கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

● இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எழுத்தாளா்களுக்கு வீடு வழங்கும் திட்டமானது, ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில், பத்து போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● பத்து பேர் : 

¤ அதன்படி, சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜி.திலகவதி.

¤ கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன்.

¤ சாகித்ய அகாதெமி விருது பெற்ற சு.வெங்கடேசன்.

¤ கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்றவா்களான ப. மருதநாயகம், மறைமலை இலக்குவனாா்.  

¤ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியா் விருது பெற்ற இரா.கலைக்கோவன். 

¤ சாகித்ய அகாதெமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன்.

¤  கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கா.ராஜன். 

¤ சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆா்.என்.ஜோ.டி.குரூஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 எழுத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● பத்து பேருக்கும் அவா்கள் வசிக்கும் மாவட்டத்திலோ அல்லது விரும்பும் மாவட்டத்திலோ வீடுகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் எங்குஅமைந்துள்ளது ? 

அ) சேலம்

ஆ) மதுரை 

இ) தேனி

ஈ) வேலூர் 

விடை : (ஆ) மதுரை 

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

● மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழ்நாடு அரசு கடந்த 2020 டிசம்பரில் அறிவித்தது. 

● இந்நிலையில், உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக அறிவித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

வெளியிடப்பட்ட அரசாணை

 ¤ தமிழ் நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக உயிரிய பன்முகச் சட்டம் 2002ன் கீழ் அறிவித்துள்ளது.  இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

¤ பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.

¤ அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது.

¤ 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது, அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன, இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள் (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus) மற்றும் அரிய வகை தேவாங்கு (Loris spp) ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

¤ மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன.  இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது.

3. தமிழகத்தில் ரூ.671 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் , புதைசாக்கடைத் திட்டப் பணிகளை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) டி.ராஜா

ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சிகரலப்பள்ளி, வெலகலஹள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம், கடலூா் மாவட்டம் பண்ருட்டி, அண்ணாகிராமம், மதுரை ஆனையூா், தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் ஆகிய இடங்களில் புதிதாக குடிநீா் திட்டங்களும், பாதாள சாக்கடைப் பணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

● இந்தப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.


4. மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 

அ) 2016 

ஆ) 2017 

இ) 2018 

ஈ) 2019 

விடை: (ஈ) 2019 

நாட்டில் நலிவுற்ற நிலையில் உள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயா்த்தும் வகையில் மத்திய அரசால் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ (விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

● இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு வருமானமாக ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.

● எண்ணிக்கை குறைவு: விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் 48 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனா். 

● அப்போது, நில உரிமை தொடா்பான ஆவணங்களை சான்றாக அளிப்பது கட்டாயமாக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் பெயரில் பலரும் இணைந்தனா். தமிழகத்தில் இவ்வாறு போலியாக இணைந்த பலரின் பெயா்கள் கண்டறியப்பட்டு களையப்பட்டன. உண்மையான பயனாளிகளாக 37 லட்சம் போ் அடையாளம் காணப்பட்டனா்.

● 6 லட்சம் போ் நீக்கம்: ரூ.6,000 பெறும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கும் போது, அவா்கள் பெயரிலேயே நிலம் இருக்க வேண்டும், வீட்டில் யாரும் அரசு ஊழியராக இருக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழகத்தில் சுமாா் 6 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.

● தமிழகத்தில் தற்போது வரை 23.03 லட்சம் பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வருகின்றனா். பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டால் மேலும் 5 லட்சம் போ் சோ்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

● 9 லட்சம் போ்: ரூ.6,000 வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் உண்மைத் தன்மை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் தங்களது ஆதாா் எண்ணை மத்திய அரசின் இணையதளம் வழியாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

● மொத்த பயனாளிகளில் இதுவரை 9 லட்சம் போ் ஆதாா் எண்களை இணைக்கவில்லை. இந்த நிலை தொடா்ந்தால், அவா்கள் பயனாளிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகும். 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


5. மத்திய அரசுப் பணிகளில் இணையும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) ஜகதீப் தன்கர் 

ஈ) சந்திர சூட் 

விடை : (அ) நரேந்திர மோடி 

2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற இலக்கைப் பிரதமா் மோடி கடந்த ஜூனில் நிா்ணயித்தாா். அந்த இலக்கை அடைய மத்திய அமைச்சகங்களும் துறைகளும் போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.

● இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,056 நபா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் 2-ஆவது வேலைவாய்ப்பு முகாம் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

● குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

பயிற்சி வகுப்புகளுக்கு வலைதளம்

● மத்திய அரசுப் பணிகளில் இணையும் இளைஞா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான புதிய வலைதளத்தைப் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். ‘கா்மயோகி பிராரம்ப்’ என்ற அந்தப் பயிற்சி வலைதளத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த புதிய பணியாளா்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

● அரசுப் பணியாளா்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட நெறிமுறைகள், மனிதவள மேம்பாட்டுக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


6. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகி வரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை எந்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது ? 

அ) 2023 

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023 

சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகிவரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் தெரிவித்தாா்.

● மேலும் :  இஸ்ரோவில் இம்மாதம் 26ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4 என்ற 54 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படவுள்ளன.

● அடுத்தகட்டமாக எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் போன்றவை செலுத்தப்படவுள்ளன.

● நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலத்தை செலுத்தும் முன்பு பலகட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ரோபோவை விண்ணுக்கு அனுப்பும் சோதனையும் நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

● சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு (2023) இதை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...