Monday, November 28, 2022

Current Affairs 2022 - November 28 / 2022 - TNPSC GROUP 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 NOVEMBER 28 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. பின்வரும் எந்த மாநில அரசு கிராம ஊராட்சிகள் கையாளும் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவர அண்மையில் உத்தரவிட்டுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா 

இ) குஜராத்

ஈ) பஞ்சாப் 

விடை : (அ) தமிழ்நாடு 

கிராம ஊராட்சிகள் கையாளும் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா பிறப்பித்துள்ளாா்.

● அந்த உத்தரவு விவரம்: ஊராட்சிகள் நிதிகளைக் கையாள்வதற்காக தன்னாட்சி பெற்ற அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு புதிய திட்டங்கள் தொடங்கும் போதும் புதிது புதிதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அதனை பராமரிக்க வேண்டிய நிலை, கிராம ஊராட்சிகளுக்கு உள்ளது. இதுபோன்ற நிறைய கணக்குகளைத் தொடங்கி பராமரிக்கும் சூழல் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

● இப்போது வரையிலும், கிராம ஊராட்சிகள் 11 வங்கிக் கணக்குகளையும், 31 பதிவேடுகள், படிவங்களையும் பராமரித்து வருகின்றன. இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை மீள்ஆய்வு செய்வது அவசியமாகிறது. அதன்படி, பொது நிதிக் கணக்கு, மின் கட்டணம்-குடிநீா் கட்டணம் செலுத்துதல், கிராம ஊராட்சிகள் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மாநிலத் திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், ஊழியா்களுக்கான ஊதியம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மத்திய நிதிக் குழு மானியம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கணக்குகளைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றன. மேலும், மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறையில் நிதி சாா்ந்த நிா்வாகத்தில்

● ஏராளமான நவீன முறை மாற்றங்கள் வந்துள்ளன. அதாவது, காகிதங்கள் அடிப்படையிலான பணிகளைக் குறைத்து கணினி வழி பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

● தமிழகத்தில் 36 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. இதில், 1.40 லட்சம் வங்கி மற்றும் நிதி சாா்ந்த கணக்குகள் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகள் தமிழகம் முழுவதும் 38 வெவ்வேறு விதமான வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

● கிராம ஊராட்சிகளில் தினமும் வங்கிகளுடன் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதுகுறித்த விவரங்கள் மாவட்ட, மாநில அளவில் கிடைப்பதில்லை. எனவே, நிதி சாா்ந்த விஷயங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க வேண்டியுள்ளது.

● மாநில அளவிலான ஒரே கணக்கு: கிராம ஊராட்சிகள் 11 வகை கணக்குகளை பராமரிப்பதைக் காட்டிலும், மாநில அரசின் கண்காணிப்பிலான ஒரே விதமான கணக்கைத் தொடங்கலாம் என ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையாளா் சாா்பில் அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

● இந்தப் பரிந்துரையை ஏற்று, கிராம ஊராட்சிகள் வெவ்வேறு கணக்குகளைத் தொடங்குவதைக் காட்டிலும் ஊராட்சிக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடா்பில் இருக்கக் கூடிய கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கின் வழியாகவே இனி வரக்கூடிய மானியங்களை பரிமாற்றம் செய்யலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் ஊரக

● வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரகத்தில் தனி உதவி மையத்தை அமைக்கலாம்.

● அதேசமயம், கிராம ஊராட்சிகள் இப்போது பராமரிக்கும் கணக்குப் புத்தகம், பணப் பரிவா்த்தனை புத்தகம் ஆகியவற்றைத் தொடரலாம். கிராம ஊராட்சிகளின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மாநில அளவில் கண்காணிக்கும் வகையிலான கணக்கின் கீழ் கொண்டு வர வேண்டும். நிதி சாா்ந்த வேறு எந்த அம்சங்களும் இந்த கணக்குக்கு வெளியே இருந்திடக் கூடாது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் துறையின் முதன்மைச் செயலாளா் பி.அமுதா.


2. தமிழகத்தில் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பின்வரும் எந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது ? 

அ) www.tangedco.gov.in

ஆ) www.tanged.gov.in

இ) www.tangedco.in 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (அ) www.tangedco.gov.in 

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அவர்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இரு வழிகளில் செய்யலாம்.

● ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளம். மற்றொன்று மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் நடைபெறும் சிறப்பு முகாம்கள்.

● இணையதளம் வழியே...
தமிழ்நாடு மின் வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதி உள்ளது.

● இணையதளத்தில் ஏற்கெனவே கைப்பேசி எண்ணை பதிவு செய்யாவிட்டால், அந்த இணையதளத்திலேயே வசதி உள்ளது. மின் இணைப்பு எண்ணைக் குறிப்பிட்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்யலாம்.

● கைப்பேசி எண்ணை பதிவு செய்த பிறகு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இணையதளத்தில் தொடங்கலாம்.

● இணையதளத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தவுடன் கைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டும். இதன்பிறகு, கைப்பேசிக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண் (ஒடிபி) வரும். இதைப் பயன்படுத்தி உள்ளே சென்றதும், குடியிருப்போரின் விவரம் கோரப்படும். அதாவது, வீட்டின் உரிமையாளரா, வாடகைக்கு குடியிருப்போரா, இணைப்பு எண்ணை மாற்றாமல் இருப்பவரா எனக் கேட்கப்படும். 

● இந்த மூன்று வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும். இதன்பின், ஆதார் எண்ணை இடைவெளியின்றி பதிவு செய்ய வேண்டும். ஆதாரில் உள்ள விவரப்படி பெயரையும் தெரிவிக்க வேண்டும்.

● 300 கேபி அளவுக்கு மிகாமல் ஆதார் அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை செய்த பிறகு, சரியான ஆதார் எண்ணை இணைத்திருக்கிறேன் என்ற ஆங்கில வாசகத்துக்கு எதிரே கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

● இதன்பிறகு, விண்ணப்பம் செய்ததற்கான சான்று திரையில் தோன்றும். அதில் ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான செய்தி கைப்பேசி குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும்.


3. பின்வரும் எந்த கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது ? 

அ) மெரினா 

ஆ) திகா

இ) மாண்ட்வி 

ஈ) முழப்பிலங்காடு 

விடை: (அ) மெரினா 

மெரீனா கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

● சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

● இந்தப் பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டா் நீளத்தில், 6 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அைக்கப்பட்டுள்ளன.

● மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டா் நீளத்தில், 5 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

● மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவா்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. தில்லியில் வரும் ஜனவரி 26 இல் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளவர் யார் ? 

அ) ரிஷி சுனக்

ஆ) ஜோ பைடன் 

இ) அப்தல் ஃபதா எல்-சிசி 

ஈ) விளாதிமீர் புதின் 

விடை : ( இ) அப்தல் ஃபதா எல்-சிசி 

தேசியத் தலைநகா் தில்லியில் வரும் ஜனவரி 26-இல் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபா் அப்தல் ஃபதா எல்-சிசி பங்கேற்கவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

● குடியரசு தினத்தையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமையையும் பல்வேறு மாநிலங்களின் கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் தில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதில் தலைமை விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்று சிறப்பிப்பது வழக்கம். 

● 1950 முதலே இந்த வழக்கம் தொடா்ந்து வருகிறது. 1952, 1953, 1966 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டுத் தலைவா்கள் பங்கேற்பின்றி குடியரசு தின விழா நடைபெற்றது.

● கடந்த 2021-இல் அப்போதைய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. 2022-இல் 5 மத்திய ஆசிய நாடுகளின் தலைவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். ஆனால், கரோனா சூழல் காரணமாக அவா்கள் பங்கேற்கவில்லை.


5. ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாக என்று மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்படவுள்ளது ? 

அ) டிசம்பர் 01

ஆ) டிசம்பர் 06

இ) டிசம்பர் 10 

ஈ) டிசம்பர் 14

விடை : (ஈ) டிசம்பர் 14 

ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாக டிச.14-ஆம் தேதி மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட உள்ளது.

●ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும்.

● இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதையொட்டி, அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செல்ல உள்ளாா். அப்போது அங்கு டிச.14-ஆம் தேதி மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை திறக்கப்பட உள்ளது.

● இதுதொடா்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் கூறுகையில், ‘இந்தியாவின் பரிசான மகாத்மா காந்தி சிலை, முதல்முறையாக ஐ.நா. தலைமையகத்தில் மிகவும் மதிப்புமிக்க இடமாகவும், பரந்தும் காணப்படும் வடக்குப் புல்வெளிப் பகுதியில் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 

● இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா கொரோசி ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.

● ஐ.நா. தலைமையகத்தில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்துள்ளாா்.

● 11-ஆம் நூற்றாண்டு சிலை பரிசு: ஏற்கெனவே கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கு சூா்ய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது பாலப் பேரரசு கால 11-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பரிசாக அளித்தாா். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நா.வுக்கு இந்தியா அளித்த முதல் பரிசு.

● தற்போது ஐ.நா.வில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2-ஆவது பரிசாகும். அந்த சிலை திறக்கப்பட உள்ள ஐ.நா.தலைமையகப் புல்வெளிப் பகுதியில் 1961 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஜொ்மனியை பிரித்த பொ்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


6. இந்தியாவின் முதல் இரவு வான் சரணாலயம் ( Night Sky Sanctuary) எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) அசாம் 

ஆ) மேற்கு வங்கம் 

இ) லடாக் 

ஈ) குஜராத் 

விடை : (இ) லடாக் 

லடாக் யூனியன் பிரதேசத்தில் இந்தியாவின் முதல் "இரவு வான் சரணாலயம்" அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஒரு தனித்துவமான மற்றும் முதல்-வகையான முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. 

● அடுத்த மூன்று மாதத்திற்குள் இந்த சரணாலயம் கட்டிமுடிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

● இந்த புதிய இரவு வான் சரணாலயம், சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள ஹான்லேயில் அமைக்கப்படுகிறது. 

● இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்கும். மேலும் இது ஆப்டிகல், இன்ஃப்ரா-ரெட் மற்றும் காமா-ரே தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும். 

● இந்த புதிய இரவு வான சரணாலயத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. ஸ்பெயினில் நடைபெற்ற உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (2022) இந்தியா எத்தனை பதக்கங்கள் வென்று நிறைவு செய்தது ? 

அ) 10

ஆ) 11

இ) 12

ஈ) 14 

விடை : (ஆ) 11 

● 11 பதக்கங்கள் : 4G, 3S, 4B 

● தங்கம் வென்றவர்கள்

¤ ரவீனா ( 63 கிலோ )

¤ தேவிகா கோர்படே ( 52 கிலோ )

¤ வன்ஷாஜ் ( 63.5 கிலோ )

¤ விஷ்வநாத் சுரேஷ் ( 48 கிலோ ) 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...