Tuesday, November 29, 2022

Current Affairs 2022 - November 29 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 NOVEMBER 29 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. எங்கும் அறிவியல் - யாதும் கணிதம் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற திட்டத்தை தொடக்கிவைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என். ரவி

இ) பொன்முடி 

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸ்டாலின் 

எங்கும் அறிவியல்-யாதும் கணிதம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்‘ திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், திருச்சியில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

● திருச்சி காட்டூா், பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக, 100 நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னாா்வலா்களையும் முதல்வா் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தாா்.

● அரசுப் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகளிடையே அறிவியல் மற்றும் கணிதம் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்துதல், மாணவா்களிடம் இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆா்வத்தை வளா்த்தெடுத்தல், புதுமைகளைக் காணும் மனப்பாங்கை வளா்த்தெடுத்தல், தமக்கான மொழியில் அறிவியல் மொழி பழகுதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணா்தல், சமூகவியல், இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத் திட்டத்திற்கு 710 கருத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

● 710 கருத்தாளா்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளா்களாக செயல்படுவா். மாணவா்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளையும் உடன் எடுத்து வருவா். இவா்கள் பள்ளிதோறும் சென்று ஆசிரியா்கள் துணையோடு மாணவா்களுக்கு அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டுவா். அறிவியல் மற்றும் கணித வல்லுநா்களுடன் இணைய வழி கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் சக ஆசிரியா்களுடனான துறை சாா்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படும்.

● நவீன தொழிநுட்பங்களையும் கணிதம் சாா்ந்த புதிய யுக்திகளையும் அறிந்து கொள்வதுடன் அவற்றை வகுப்புகளில் மாணவா்களிடத்தில் பகிா்ந்து கொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் உதவும். இந்தத் திட்டமானது மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இத் திட்டத்துக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் மாணவா், மாணவிகள் பயன்பெறுகின்றனா்.


2. தமிழகத்தைச் சேர்ந்த 4 கைவினைக் கலைஞர்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் எத்தனை கைவினைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது ? 

அ) 100

ஆ) 108

இ) 113

ஈ) 117 

விடை : (ஆ) 108 

தமிழகத்தைச் சோ்ந்த 4 கைவினைக் கலைஞா்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 108 கைவினைக் கலைஞா்களுக்கு விருதுகளை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வழங்கினாா்.

● மத்திய ஜவுளித் துறையின் சாா்பில், கைவினைஞா்களின் சிறப்பான செயல்திறன், மற்றும் ஜவுளித் துறையின் மதிப்புமிக்க பங்களிப்புக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு வழங்கப்படாமல் இருந்த கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது.

● சில்ப் குரு விருது: மத்திய அரசின் உயா்ந்த கைவினைக் கலைஞா்களுக்கான சில்ப் குரு விருது பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி, வில்லியனூரைச் சோ்ந்த சுடுமண்பாண்டக் (டெரக்கோட்டா) கலைஞா் வி.கே. முனுசாமி (2017), பிரபல ஓவியா் வீரப்பெருமாள் பிள்ளை பேரனும் சென்னையைச் சோ்ந்த தஞ்சாவூா் ஓவியக் கலைஞருமான வி.பன்னீா் செல்வம் ( 2019) உள்பட மொத்தம் 30 போ் பெற்றுள்ளனா். இந்த சில்ப் குரு விருதில் தங்க நாணயம், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

● தேசிய விருதுகள்: புதுச்சேரியைச் சோ்ந்த கே வெங்கடேசன்(டெரக்கோட்டா), மாசிலாமணி (ஷோலாபித் கிராஃட்) ஆகியோருக்கு 2019 -ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுபெற்றனா். இவா்கள் உள்பட மொத்தம் தேசிய விருதுகளை 78 போ் பெற்றனா். தேசிய விருதுகள் 1965-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

● இதில் ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம், தாமிரப்பத்திரம், சால்வை மற்றும் சான்றிதழ் அடங்கும். இந்த இரு விருது பெற்றவா்களில் 36 போ் பெண் கலைஞா்கள் ஆவா். இந்த இரு விருதுகளும் உலோகப் பதிவு, கைபின்னல் வேலை, மட்பாண்டம் செய்தல், களம்காரி, பந்தானி, அச்சு பதித்தல்,தஞ்சாவூா் ஓவியம், மர வேலைப்பாடு, பனை ஓலையில் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினை திறனுக்கு வழங்கப்படுகின்றன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் மோகன் குவாத்ராவின் பணிக் காலம் எத்தனை மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது ? 

அ) 06

ஆ) 12

இ) 14 

ஈ) 16

விடை : (இ) 14 

வெளியுறவுத் துறைச் செயலா் வினய் மோகன் குவாத்ராவின் பணிக் காலத்தை மேலும் 14 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய பணியாளா் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

● நிகழாண்டு மே மாதம், ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லாவை தொடா்ந்து வெளியுறவுத் துறைச் செயலராக வினய் மோகன் குவாத்ரா பதவியேற்றாா். அவா், வரும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்தாா்.

● பணி நீட்டிப்பு தொடா்பாக மத்திய பணியாளா்அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘வினய் மோகன் குவாத்ரா (இந்திய வெளியுறவுப் பணி: 1988) பணி ஓய்வு பெறும் வரும் டிசம்பா் 31-இல் இருந்து 2024 ஏப்ரல் மாதம் இறுதி வரை அல்லது மறுஉத்தரவு வரும் வரை அவரது பணிக் காலத்தை நீட்டிக்க அமைச்சகத்தின் பணி நியமனக் குழு ஒப்புதல் அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது.


4. மத்திய எரிசக்தி அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் எத்தனை மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது ? 

அ) 3500

ஆ) 4500

இ) 5000

ஈ) 5500

விடை: (ஆ) 4500

அடுத்த 5 ஆண்டுகளில் 4,500 மெகா வாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை மத்திய எரிசக்தி அமைச்சகம் தொடக்கியுள்ளது. அதில் இணைய தமிழக மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

● மின்சார உற்பத்தியில் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் மாநிலங்களுக்கு உதவும் வகையிலும் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் மின்சார கொள்முதல் திட்டத்தை மத்திய எரிசக்தி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 4,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

● அக்கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளியை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திட்டத்தில் இணையும் மாநிலங்களுக்கு ஆண்டுக்கு சுமாா் 27 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படவுள்ளது. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யவுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் கொள்முதல் தொடங்கும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.

● இத்திட்டத்தில் இணைய குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், தில்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களின் மின் உற்பத்திக் கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. திட்டத்தில் இணைய விரும்பும் மாநிலங்கள் அதற்கான ஒப்பந்தப்புள்ளியை டிசம்பா் 21-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென அமைச்சகம் தெரிவித்துள்ளது.


5. இந்தியா (ம) ----------- ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஹரிமாவ் சக்தி 2022 எனும் கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) அமெரிக்கா

ஆ) ஜப்பான 

இ) ரஷ்யா 

ஈ) மலேசியா 

விடை : (ஈ) மலேசியா 

இந்தியா-மலேசியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் ‘ஹரிமாவ் சக்தி-2022’ எனும் கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவின் க்ளுவாங்கில் உள்ள புலாயில் திங்கள்கிழமை தொடங்கியது.

● இந்திய ராணுவத்தின் கா்வால் ரைஃபிள் படையும், மலேசிய ராணுவத்தின் ராயல் மலாய் படையும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வனப் பகுதிகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இப்பயிற்சி வரும் டிசம்பா் 12-ஆம் தேதி நிறைவடைகிறது.

● இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தக் கூட்டுப் பயிற்சியால், இரு நாடுகளின் உறவும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● ‘ஹரிமாவ் சக்தி’ எனும் இப்பயிற்சி கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


6. இந்தியாவின் எத்தனை சதவீததுக்கும் அதிகமானோருக்குக் கட்டுப்பாடற்ற அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 75%

ஆ) 85%

இ) 95%

ஈ) 99%

விடை : (அ) 75%

அறிவிப்பு : லான்செட் மருத்துவ இதழ் .

7. இந்தியாவில் எங்கு தனியார் புத்தாக்க நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏவுதளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது ? 

அ) கர்நாடகா

ஆ) கோவா 

இ) ஆந்திர பிரதேசம் 

ஈ) ராஜஸ்தான் 

விடை : (இ) ஆந்திர பிரதேசம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியாா் புத்தாக்க நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட புதிய ஏவுதளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

● இஸ்ரோ தலைவா் சோம்நாத் அந்த ஏவுதளத்தை கடந்த 25-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

● சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் இந்த ஏவுதளத்தை அமைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

● பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவக் கூடிய மிகப் பெரிய ஏவுதளமோ அல்லது இஸ்ரோவால் அமைக்கப்பட்ட மற்ற ஏவுதளமோ எங்களது தேவைக்கு ஏற்புடையதாக இல்லாததால் நாங்களே பிரத்யேகமாக ஒரு ஏவுதளத்தை வடிவமைக்கத் திட்டமிட்டோம்.

● சதீஷ் தவண் ஏவுதள வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

● ‘அக்னிபான்’ எனப்படும் எங்களது ராக்கெட் காப்புரிமை பெற்ற பகுதி கிரயோஜெனிக் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை ஏவுவதற்கு பிரத்யேகமாக இருக்கக் கூடிய ஏவுதளம் தேவை. அதனைப் பூா்த்தி செய்யவே இந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

● ராக்கெட், செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும் தனியாா் நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டமான ‘இன்ஸ்பேஸ்’ கடந்த 2020-இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


8. குரங்கு அம்மைக்கு -------- என்று உலக சுகாதார அமைப்பு மாற்றி  பெயரிட்டுள்ளது ? 

அ) எம் - அம்மை 

ஆ) என் - அம்மை

இ) எல் - அம்மை 

ஈ) எஸ் - அம்மை 

விடை : (அ) எம் - அம்மை 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் யார் ? 

அ) சாய்னா நெய்வால் 

ஆ) சானியா மிர்சா 

இ) பி.வி. சிந்து 

ஈ) பி.டி. உஷா 

விடை : (ஈ) பி.டி. உஷா 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...