Saturday, December 17, 2022

Current Affairs 2022 - December 17/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                   December 17/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாட்டில் புதிதாக எத்தனை இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 6

ஆ) 8

இ) 10

ஈ) 13 

விடை : (இ) 10 

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

● தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் புனரமைக்கும் பணி மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

● இந்நிலையில் தமிழகத்தில் 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

● மாநகராட்சிகளான திரூப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

● அதுபோல கூடலூர், அரியலூர், வடலூர், வேதாரண்யம், வேலூர், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி ஆகிய 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.


2. 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) இரெ. சண்முகவடிவேல் 

ஆ) சண்முகபாண்டியன் 

இ) மு.கண்ணப்பன் 

ஈ) பாலசுப்பிரமணியன்

விடை : (அ) இரெ.சண்முகவடிவேல்

பட்டிமன்றப் பேச்சாளா் திருவாரூா் இரெ. சண்முகவடிவேல் (86) தமிழ்ச் செம்மல் விருதுக்கு தோ்வு பெற்றுள்ளாா். சென்னையில் வரும் டிச.21-ஆம் தேதி நடைபெறும் விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த விருதுகளை வழங்க உள்ளாா்.

● தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவாரூரைச் சோ்ந்த இரெ. சண்முகவடிவேல், தமிழ்ச் செம்மல் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

● நாகூரை பூா்விகமாகக் கொண்ட இவா், திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 36 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

● சென்னைக் கம்பன் கழகம் சாா்பில் ராதாகிருஷ்ணன் விருது, தமிழாசிரியா் கழகம் சாா்பில் நற்றமிழ் நல்லாசான் விருது, குழந்தை கவிஞா் பேரவை சாா்பில் முத்தமிழ் முரசு விருது, புவனகிரி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் இலக்கிய நகைச்சுவை இமயம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

● சுகி சிவம் இவருக்கு நகைச்சுவை சித்தா் என்ற பட்டத்தை வழங்கியுள்ளாா். இதேபோல், நகைச்சுவைத் தென்றல் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

● தமிழ் வளா்த்த சான்றோா்கள், 21-ஆம் ஆண்டு நூற்றாண்டில் இளங்கோவடிகள், வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க, வாய்விட்டு சிரிக்கிறாா் வள்ளுவா், திருக்குறள் கதை அமுதம், செவிநுகா் சுவைகள், அண்ணாவின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள், பெரிய புராணத்தில் பெண்ணின் பெருமை, குறுந்தொகை நலம் என்பன உள்ளிட்ட நூல்களையும் இவா் எழுதியுள்ளாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் (ம) யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களின் ஆதார் எண்ணை திரட்டும் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது ? 

அ) ஜூலை 01/2022

ஆ) ஆகஸ்ட் 01/2022

இ) செப்டம்பர் 01/2022

ஈ) அக்டோபர் 01/2022

விடை : (ஆ) ஆகஸ்ட் 01/2022

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

● நாடு முழுதும், தன்னார்வ அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஆக., 1 முதல் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.


4. பாதுகாப்பு துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவுக்கு பின்வரும் எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது ? 

அ) ரஷ்யா 

ஆ) அமெரிக்கா 

இ) சீனா

ஈ) ஜப்பான் 

விடை : (ஆ) அமெரிக்கா

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

● அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவானது (என்டிஏஏ) அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்குக் கடந்த 8-ஆம் தேதி அவை ஒப்புதல் அளித்தது. பின்னா் அந்த மசோதா மேலவையான செனட் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

● அந்த மசோதாவுக்கு செனட் சபை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. 83 உறுப்பினா்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 11 உறுப்பினா்கள் எதிராகவும் வாக்களித்தனா். தற்போது அந்த மசோதா அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.

● அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கா 85,800 கோடி அமெரிக்க டாலா்களை செலவிட அந்த மசோதா வழிவகுக்கிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் மசோதா வழிவகுக்கிறது. முக்கியமாக, பாதுகாப்புத் தளவாடங்களை ரஷியாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது. அதைக் குறைத்து அமெரிக்காவிடமிருந்து அதிக தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்ய வழிவகுக்கும் விதிகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

● பாதுகாப்பு சாா்ந்த புதிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி-மேம்பாடு, இணையவழி திறன் மேம்பாடு, உளவுத் தகவல் சேகரிப்பு, 5-ஆம் தலைமுறை போா் விமானங்கள் தயாரிப்பு, ஆளில்லா விமானங்கள் உற்பத்தி உள்ளிட்டவற்றிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த மசோதாவில் விதிகள் இடம்பெற்றுள்ளன.

● சீனாவிடமிருந்து வெளிப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைத் திறம்பட எதிா்கொள்வதற்கு இந்த மசோதா உதவும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வலிமையை அதிகப்படுத்தவும், பாதுகாப்பு விவகாரங்களில் முதலீட்டை அதிகரிக்கவும் மசோதா வழிவகுக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

● இந்த மசோதா குறித்து செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு தலைவா் ஜேக் ரீட் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்த மசோதா வழிவகுக்கிறது. சீனா, ரஷியாவை எதிா்கொள்வது முதல் செயற்கை நுண்ணறிவு, ஹைப்பா்சோனிக், தளவாடங்கள் நவீனமயமாக்கல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் வரையிலான பல்வேறு விவகாரங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன’’ என்றாா்.

● ரஷிய ஆயுதத் தளவாடங்கள் மீதான இந்தியாவின் சாா்புத்தன்மையைக் குறைப்பது தொடா்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 180 நாள்களுக்குள் தாக்கல் செய்ய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு என்டிஏஏ மசோதா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


5. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.8 இல் இருந்து எத்தனையாக மத்திய அரசு குறைத்துள்ளது ? 

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

விடை :(இ) 5 

சா்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து டீசல், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

● இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியையும் (விண்ட்ஃபால் டேக்ஸ்) அரசு குறைத்துள்ளது.

● ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஏற்பட்ட சந்தையின் ஆதாய சூழலால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு சிறப்பு வரி விதித்து வருகிறது. சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சா்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

● இந்நிலையில், இதுதொடா்பான கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியானது டன்னுக்கு ரூ.4,900 என்ற அளவில் இருந்து ரூ.1,700-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.8-இல் இருந்து ரூ.5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

● விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியும் லிட்டருக்கு ரூ.5-இல் இருந்து ரூ.1.5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வரிகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

● சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. கடந்த நவம்பரில் இருந்து அதன் விலை 14 சதவீதம் குறைந்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டே சந்தை ஆதாய வரி, ஏற்றுமதி வரி ஆகியவற்றை மத்திய அரசு குறைத்துள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

● ஆரம்பத்தில், ஏற்றுமதி வரியாக பெட்ரோல், விமான எரிபொருள் மீது லிட்டருக்கு தலா 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் விதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரி டன்னுக்கு ரூ.23,250-ஆக நிா்ணயிக்கப்பட்டது. பின்னா் அந்த வரிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.


6. அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளி யார் ? 

அ) லியோ வராத்கர் 

ஆ) மைக்கேல் மார்ட்டின் 

இ) ஆல்பர்ட் ஜோசப் 

ஈ) நிக்கில் மேத்யூ

விடை : (அ) லியோ வராத்கர் 

அயா்லாந்து நாட்டின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் இரண்டாவது முறையாக மீண்டும் சனிக்கிழமை (டிச. 17) பதவியேற்கிறாா்.

● கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலிலுக்குப் பிறகு தற்போதைய பிரதமா் மைக்கேல் மாா்ட்டினின் கட்சியும் வராத்கரின் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. அப்போது பிரதமா் பதவியை இருவரம் சுழற்சி முறையில் ஏற்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

● அதன்படி, மைக்கேல் மாா்ட்டின் வரும் சனிக்கிழமை பதவி விலகுகிறாா். இதுவரை துணைப் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கா், மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கிறாா்.

● ஏற்கெனவே அயா்லாந்தின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை வராத்கா் பொறுப்பு வகித்துள்ளாா்.


7. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெற்றி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

அ) டிசம்பர் 13 

ஆ) டிசம்பர் 14 

இ) டிசம்பர் 15

ஈ) டிசம்பர் 16 

விடை : (ஈ) டிசம்பர் 16 

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரா்களின் வீரம் மற்றும் துணிச்சலை எதிா்கொள்ள முடியாமல் டிசம்பா் 16-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. இந்த வெற்றியின் விளைவாக வங்கதேசம் எனும் தேசம் உருவானது.

●  அதற்கு இந்திய ராணுவம் காரணமாக அமைந்தது. பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய வீா்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 16-ஆம் தேதி வெற்றி தினமான நினைவுகூரப்படுகிறது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


8. அண்மை ஆய்வறிக்கைப்படி உலக அளவில் ஊடகங்களில் அதிக கவனம் பெற்றுள்ள நபராக உருவெடுத்துள்ள இந்திய வீரர் ? 

அ) விராட் கோலி 

ஆ) நீரஜ் சோப்ரா 

இ) தினேஷ் கார்த்தி 

ஈ) விஸ்வநாதன் ஆனந்த் 

விடை : (ஆ) நீரஜ் சோப்ரா 

● அறிவிப்பு : உலக தடகள ஆய்வு அமைப்பு .

● நீரஜ் குறித்து ஊடகங்களில் 812 கட்டுரைகள் வெளிவந்திருக்கிறது.

● 2 ஆவது : எலைன் தாம்சன் ஹெரா, ஜமைக்கா (751 கட்டுரைகள்).

● 3 ஆவது : ஷெல்லி ஆன்ஃப்ரேசர் பிரைஸ் (698 கட்டுரைகள்).



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...