Sunday, December 18, 2022

Current Affairs 2022 - December 18/2022 - TNPSC Group 1,2/2A & 4

                           GK SHANKAR 
                      DECEMBER 18/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படவுள்ள தமிழறிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார் ?

அ) சேலம் 

ஆ) புதுக்கோட்டை 

இ) மதுரை

ஈ) தேனி

விடை : (ஆ) புதுககோட்டை 

புதுக்கோட்டையைச் சோ்ந்த மறைந்த தமிழறிஞா் வீ.கே. கஸ்தூரிநாதனுக்கு 2021ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

● இவா், புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, வள்ளுவா் நடுநிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். 

● தனிமனித தியாகங்கள், இந்திய இளைஞனே உன் கடமைகள் இவை, பெண்ணுக்கு உரிமை தாரீா், இன்னொரு சுதந்திரப் போா், நோ்மை ஒரு குற்றமா?, அவள் சின்னப்பெண்ணா?, அட்சய பாத்திரத்தில் அழுக்குப் படியாது !, வீரத்தின் விளைநிலம் எங்கள் பாரதம், மறுமலா்ச்சி கவிஞா்களின் உணா்ச்சிமிகு பாடல்கள், இயற்கை வளங்களை போற்றுவோம். கம்பன் காலடியில் ஓடிய கவிதை ஆறு, கம்பன் காட்டும் மனிதநேயம் ஆகிய நூல்களின் ஆசிரியா்.


2. கஞ்சா, குட்கா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க ஆபரேசன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கியுள்ள மாநிலம் எது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) குஜராத்

இ) அசாம்

ஈ) மணிப்பூர் 

விடை : (அ) தமிழ்நாடு 

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆபரேசன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கைக்கு ஏதுவாக, கஞ்சா வியாபாரிகள், கஞ்சா பதுக்கி வைப்பவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்படும் என காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

● இது தொடா்பாக அவா் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: கஞ்சா வேட்டை 3.0 தமிழகம் முழுவதும் கடந்த டிச.12 முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாள்களில் 586 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 494 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 21 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

● அனைத்து மாநகர காவல் ஆணையா்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டுள்ளவா்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

● கஞ்சா பதுக்கி வைத்திருப்பவா்கள், விற்பவா்கள் தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற தொலைப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா் ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் சி.சைலேந்திரபாபு.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. ஜிஎஸ்டி கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது ?

அ) 46

ஆ) 47

இ) 48

ஈ) 49

விடை : (இ) 48

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில நிதியமைச்சா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

● எந்தப் பொருளுக்கும் ஜிஎஸ்டி உயா்த்தப்படவில்லை; புதிதாகவும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. பருப்பு உமி மீது 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

● விவாதிக்கப்படாத விவகாரங்கள்: கூட்டத்தில் விவாதிக்கப்பட பட்டியலிடப்பட்டிருந்த 15 விவகாரங்களில் 8 மட்டுமே விவாதிக்கப்பட்டது. 

● ஜிஎஸ்டி சட்டத்தின் சில விதிகளில் இருந்து குற்றவியல் நடைமுறைகளை நீக்குவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடமையைச் செய்யவிடாமல் அதிகாரிகளைத் தடுத்தல், ஆவணங்களை சேதப்படுத்துதல், உரிய தகவலை வழங்க மறுத்தல் ஆகியவை குற்றவியல் நடைமுறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதற்காக ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். அதையடுத்து அதற்கு மாநில சட்டப்பேரவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

● ஜிஎஸ்டி மோசடி குறித்து குற்றவியல் வழக்கு தொடா்வதற்கான குறைந்தபட்ச வரம்பை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயா்த்தவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பொருள்கள், சேவைகளை வழங்காமல் போலி ரசீதுகளை மட்டும் தயாரிக்கும் மோசடிகளுக்கு இந்தப் புதிய வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மோசடிகளுக்கு உச்சவரம்பு ரூ.1 கோடியாகவே தொடரும்.


4. மிஸோரம்,  மணிப்பூர்,  திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 21 ஹிந்தி நூலகங்களை திறந்து வைத்தவர் யார் ?

அ) திரௌபதி முர்மு 

ஆ) நரேந்திர மோடி 

இ) டி.ஒய். சந்திரசூட் 

ஈ) ஜகதீப் தன்கர் 

விடை: (ஆ) நரேந்திர மோடி 

திரிபுரா, மேகாலயம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு ரூ.6,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

● இவ்விரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

● இரு மாநிலங்களிலும் வீட்டுவசதி, சாலைகள், விவசாயம், தொலைத்தொடா்பு, தகவல்தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளில் பணிகள் முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடக்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறாா். பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களிலும் அவா் பங்கேற்கவுள்ளாா்.

● முதலாவதாக மேகாலயம் செல்லும் பிரதமா், ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் (ஐஐஎம்) புதிய வளாகத்தைத் திறந்துவைக்கவுள்ளாா். பின்னா், வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதுடன், அங்கு ரூ. 2,450 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்.

● வடகிழக்கு பிராந்தியத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 320-க்கும் அதிகமான 4ஜி கைப்பேசி கோபுரங்களை அவா் நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளாா். மேகாலயம், மணிப்பூா், அருணாசல பிரதேசம் இடையே அமைக்கப்பட்டுள்ள சாலை, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 21 ஹிந்தி நூலகங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் அவரால் தொடக்கிவைக்கப்பட உள்ளன.

● திரிபுராவில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் ரூ.3,400 கோடி செலவில் கட்டப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளிடம் பிரதமா் ஒப்படைக்கவுள்ளாா். விரிவுபடுத்தப்பட்ட அகா்தலா புறவழிச்சாலையை திறந்துவைக்கும் பிரதமா், அந்த மாநிலத்தில் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 230 கிமீ தொலைவுக்கு புதிய சாலைகள் அமைத்தல், 540 கிமீ தொலைவிலான 112 சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? 

அ) சென்னை

ஆ) ஹைதராபாத் 

இ) மும்பை

ஈ) காந்திநகர் 

விடை : (ஆ) ஹைதராபாத் 

ஹைதராபாதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையத்தை மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

● உலகில் தயாரிக்கப்படும் மாத்திரைகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இப்போது இந்தியாவை மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல, மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாற்ற விரும்புகிறோம். 

● இதற்கு தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை உருவாக்க வேண்டும். எனவே, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.


6. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல் கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது ?

அ) 18

ஆ) 19

இ) 21

ஈ) 25

விடை : (ஈ) 25 

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 25-ஆவது கூட்டம், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது.

● இதில், இந்திய-வங்கதேச எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல், கடத்தல் சம்பவங்கள் குறித்தும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022 ல் மூன்றாம் இடம் பிடித்துள்ள அணி எது ?

அ) மொராக்கோ 

ஆ) குரோஷியா 

இ) உருகுவே

ஈ) செர்பியா 

விடை : (ஆ) குரோஷியா 


IV. முக்கிய தினங்கள் 


8. International Migrants Day 2022 ---------

Ans : December 16

Theme(2022) : Integrating migrants into primary health care.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...