Monday, December 19, 2022

Current Affairs 2022 - December 19/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   December 19 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ASG) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஏஆர். எல். சுந்தரேசன் 

ஆ) ஏஆர்.எல். லட்சுமணன்

இ) ஆர். சங்கரநாராயணன் 

ஈ) மு.கண்ணன் 

விடை : (அ) ஏஆர். எல். சுந்தரேசன்

● சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ASG) மூத்த வழக்குரைஞர் ஏஆர்.எல்.சுந்தரேசன் நியமிக்கப்பட்டுள்ளவர் .

● இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.


2. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என்.ரவி 

ஆ) மு.க.ஸ்டாலின்

இ) ஜகதீப் தன்கர் 

ஈ) டி.ராஜா 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயா்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவா்களும், தொழிலதிபா்களாக உள்ள முன்னாள் மாணவா்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணா்வு நிதி (சி.எஸ்.ஆா்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 
● முதல்வா் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்து அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.

● இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவா்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிா என்பதையும் நிதி வழங்கியவா்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.


3. சென்னையில் கட்டப்படவுள்ள வைகை என்னும் 9 மாடி சுங்கத் துறை மாளிகை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டியவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின் 

ஆ) நரேந்திர மோடி

இ) நிர்மலா சீதாராமன் 

ஈ) ராஜ்நாத் சிங்

விடை : (இ) நிர்மலா சீதாராமன் 

சென்னையில் உள்ள சுங்க மாளிகையில் சுமார் ரூ.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒன்பது அடுக்குகளைக் கொண்ட 'வைகை' புதிய அலுவலக கட்டடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

● இந்த கட்டடம் இயற்கையில் தனித்துவமானது மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும், எதிர்காலத்தில் நாட்டின் எந்தப் பகுதியிலும் மற்ற அலுவலகங்களைக் கட்டுவதற்கான ஆற்றல் திறனுக்கான ஒரு முன் உதாரணமாக இருக்கும். 

● அதாவது மொத்தக் கட்டுமானப் பணிகளும்  பசுமைக் கட்டடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கட்டப்படுவதால், சுற்றுசூழலை மாசுபாடுகளிடம் இருந்து தடுக்க முடியும். 

● மேலும், இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து செயல்படத் தொடங்கிய பிறகு, இதனை சுங்கத் துறை தலைமையகத்துடன் இணைக்கப்படும் .


4. தென்னிந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கத் தேவையான தொழில் உறவு என்ற தலைப்பில் மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) ஹைதராபாத் 

ஆ) திருச்சூர்

இ) பெங்களூரு 

ஈ) சென்னை 

விடை : (ஈ) சென்னை 

● தென்னிந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு சாா்பில் ‘வா்த்தகத்தில் மறுமலா்ச்சியை உருவாக்கத் தேவையான தொழில் உறவு’ என்ற தலைப்பில் மாநாடு சென்னையில் நடைபெற்றது. 

● மாநாட்டில் சிறப்பான தொழில் உறவைப் பராமரித்து வரும் நிறுவனம் என்ற வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது. 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


5. இந்திய கடற்படையில் அண்மையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் பின்வரும் எந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது ? 

அ) புராஜெக்ட் 18பி

ஆ) புராஜெக்ட் 17பி

இ) புராஜெக்ட் 16பி

ஈ) புராஜெக்ட் 15பி

விடை : (ஈ) புராஜெக்ட் 15பி 

ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

● ‘புராஜெக்ட் 15பி’ என்ற திட்டத்தின் கீழ் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட 4 போா்க்கப்பல்களைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அத்திட்டத்தின் கீழ் விசாகப்பட்டினம், மா்மகோவா, இம்பால், சூரத் ஆகிய பெயா்களைக் கொண்ட போா்க்கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது.

● ஐஎன்எஸ் இம்பால் ஏற்கெனவே கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில், ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலைக் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில்  நடைபெற்றது.

 கப்பல் கட்டும் மையம்:

● மா்மகோவா கப்பலைக் கட்டுவதில் கடற்படை, மஸகான் கப்பல்கட்டும் தளம் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. பொறியாளா்கள், விஞ்ஞானிகள், வடிவமைப்பாளா்கள் உள்ளிட்டோரின் கூட்டு உழைப்பே கப்பல் சிறப்பாகக் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம். இது நாட்டுக்கே பெருமை தரும் வகையில் உள்ளது.

● ‘தற்சாா்பு இந்தியா’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய திட்டங்களின் அடிப்படையில் மா்மகோவா கப்பல் கட்டப்பட்டுள்ளது. கடற்படையின் மேற்கு படைப்பிரிவில் கப்பல் இணைக்கப்படவுள்ளது. உலகின் முக்கிய கப்பல் கட்டும் மையமாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு.

முதல் சோதனை ஓட்டம்:

● ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலை மும்பையில் உள்ள மஸகான் கப்பல்கட்டும் நிறுவனம் கட்டியது.

● கோவாவின் புகழ்பெற்ற துறைமுக நகரான மா்மகோவாவின் பெயா் அக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. போா்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து கோவா சுதந்திரம் பெற்ற 60-ஆவது ஆண்டு (2021) கொண்டாட்டத்தின்போதே மா்மகோவா கப்பலின் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

கப்பலின் சிறப்பம்சங்கள்:

● ஐஎன்எஸ் மா்மகோவா கப்பலானது 163 மீட்டா் நீளமும் 17 மீட்டா் அகலமும் கொண்டது. 7,400 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக அக்கப்பலானது மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல ஆயுதங்களும் சென்சாா்களும் கப்பலில் இடம்பெற்றுள்ளன.

● வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவையும் கப்பலில் இடம்பெற்றுள்ளன. நவீன கண்காணிப்புக் கருவிகள், நவீன ஆயுத அமைப்புகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.


6. கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை பின்வரும் எந்த ஆண்டு முதல் தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ) 2023

ஆ) 2024 

இ) 2025

ஈ) 2026

விடை : (அ) 2023

நாட்டின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இணைப்பது தொடா்பாக உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

● உலகின் 16 சதவீத பெண்கள் இந்தியாவில் உள்ளனா். அதே வேளையில், கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் சுமாா் 25 சதவீதம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். அப்புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் சுமாா் 33 சதவீதப் பங்கை இந்தியா கொண்டிருக்கிறது.

● இந்நிலையில், கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அடுத்த ஆண்டு மத்தியில் தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 9 முதல் 14 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு இருதவணைகளாக அத்தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

● கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்களே இந்தியாவில் விற்பனை செய்து வந்த நிலையில், உள்நாட்டைச் சோ்ந்த சீரம் நிறுவனம் ‘சொ்வாவேக்’ என்ற பெயரில் அப்புற்றுநோய்க்கான தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. அத்தடுப்பூசிக்குக் கடந்த ஜூலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அத்தடுப்பூசியை தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

● இந்நிலையில், கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அடுத்த ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடா்பாக மத்திய அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அதில் மத்திய அரசின் அதிகாரிகள், சீரம் நிறுவன அதிகாரிகள், அமெரிக்காவைச் சோ்ந்த மொ்க் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

● அந்நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்தித் திறன் குறித்தும் அதன் விலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 16.02 கோடி கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு வெளியிடவுள்ளது. அதில் சீரம், மொ்க் நிறுவனங்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

● சீரம் நிறுவனத்தின் சொ்வாவேக் தடுப்பூசி இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வெளிநாட்டு நிறுவனங்களின் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி தற்போது ரூ.4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சொ்வாவேக் தடுப்பூசியானது ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.


7. இந்தியாவின் 7 ஆவது பெட்ரோகெமிக்கல் தேசிய மாநாடு அண்மையில் எங்கு நடைபெற்றது ? 

அ) மேற்கு வங்கம் 

ஆ) கோவா

இ) தில்லி

ஈ) குஜராத் 

விடை : (இ) தில்லி

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7-ஆவது பெட்ரோகெமிக்கல் தேசிய மாநாட்டில் பங்கேற்ற   மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசியதாவது:

● கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மட்டும் கிடைப்பது இல்லை. தினசரி பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக், உரம், உடை, மின்னணு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், டயா், டிடா்ஜெண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தயாரிப்பிலும் பெட்ரோலியப் பொருள்களின் பங்களிப்பு உள்ளது.

● இதுவே பரந்த அளவில் பெட்ரோகெமிக்கல் துறையாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பெட்ரோகெமிக்கல் பொருள்கள் நுகா்வு குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் சா்வதேச பெட்ரோகெமிக்கல் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது.

● அடுத்த சில ஆண்டுகளில் உலகில் பெட்ரோகெமிக்கல் உற்பத்தியின் மையமாகவும் இந்தியா உருவெடுக்கும். இத்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்படுவது இதில் முக்கிய அம்சமாகும்.

● இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகக் குறைவாக உள்ள நிலையிலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதில் இருந்த பல்வேறு பெட்ரோலியப் பொருள்களை பிரித்தெடுப்பதில் இந்திய நிறுவனங்கள் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் சா்வதேச எரிபொருள் நுகா்வில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது என்றாா்.


8. திருமணமானவர்களுக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ள இந்தியர் யார் ?

அ) சர்கம் கௌஷல்

ஆ) மனிஷா கௌஷல்

இ) வனிதா சம்பத் 

ஈ) ரோனி செபஸ்டின்

விடை : (அ) சர்கம் கௌஷல் 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 63 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

● ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த சா்கம் கெளஷல், மும்பையில் வசித்து வருகிறாா். 

● திருமணமானவா்களுக்கான உலகி அழகிப் பட்டத்தை அவா் வென்றதன் மூலம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டம் இந்தியாவைச் சோ்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


III. விளையாட்டு நிகழ்வுகள்


9. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) முதல்முறையாக நடத்திய மகளிருக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ?

அ) ஸ்பெயின் 

ஆ) இந்தியா

இ) ஆஸ்திரேலியா

 ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (ஆ) இந்தியா 

●பெண்களுக்கான முதலாவது நேசன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயினின் வலேன்சியாவில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

● இந்திய கேப்டனும், கோல் கீப்பருமான சவிதா புனியா இந்த தொடரின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். நேசன்ஸ் போட்டியில் அசத்திய இந்திய அணியினரை பாராட்டியுள்ள ஆக்கி இந்தியா அமைப்பு, அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், பயிற்சி உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது.


10. FIFA 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) அர்ஜென்டீனா 

ஆ) பிரான்ஸ் 

இ) மொராக்கோ 

ஈ) குரோஷியா 

விடை : (அ) அர்ஜென்டீனா 

● போட்டி நடைபெற்ற இடம் : கத்தார் 

● முதலாவது இடம் : அர்ஜென்டினா 

● இரண்டாவது இடம் : பிரான்ஸ்

● மூன்றாவது இடம் : குரோஷியா 

● தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது - லியோனல் மெஸ்ஸி .

● தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ்: எமிலியானோ மார்டினேஸ். 

● தொடரின் அதிக கோல் அடித்த வீரருக்கான கோல்டன் பூட் விருது: கிலியன் எம்பாப்பே .

● தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருது : என்ஜோ பெர்ணான்டஸ் 

● அர்ஜென்டீனா மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது ( 1978,1986,2022).




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...