Thursday, December 22, 2022

Current Affairs 2022 - December 22/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    December 22 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசு சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது எத்தனை தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) 48

ஆ) 38

இ) 28

ஈ) 18 

விடை : (ஆ) 38 

தமிழ் மொழிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்து வரும் தமிழறிஞா்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

● 38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளையும், 10 பேருக்கு ‘சிறந்த மொழிபெயா்ப்பாளா்’களுக்கான விருதுகளையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் அளித்தாா்.

● இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுகள் 38 பேருக்கு வழங்கப்பட்டன. அதன்படி, சி.சிவசிதம்பரம் (அரியலூா்), மா.சோதி (ராணிப்பேட்டை), புலவா் அ.மாயழகு (ராமநாதபுரம்), முத்துரத்தினம் (ஈரோடு), ஆ.நாகராசன் (கடலூா்), கடவூா் மணிமாறன் (கரூா்), இரா.துரைமுருகன் (கள்ளக்குறிச்சி), புலவா் சு.கந்தசாமி பிள்ளை (கன்னியாகுமரி), ஆ.ரத்தினகுமாா் (கிருஷ்ணகிரி), மானூா் புகழேந்தி (கோவை), வ.தேனப்பன் (சிவகங்கை), எம்.கே.சுப்பிரமணியன் (செங்கல்பட்டு), வே.மாணிக்காத்தாள் (சென்னை), இரா.மோகன்குமாா் (சேலம்), ஆறுமுக சீதாராமன் (தஞ்சாவூா்), கவிஞா் கண்ணிமை (தருமபுரி), துரை.தில்லான் (திண்டுக்கல்), க.பட்டாபிராமன் (திருச்சி), வ.பாலசுப்பிரமணியன் (திருநெல்வேலி) ஆகியோருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

● மேலும், தெய்வ.சுமதி (திருப்பத்தூா்), அ.லோகநாதன் (திருப்பூா்), க.பரமசிவன் (திருவண்ணாமலை), செ.கு.சண்முகம் (திருவள்ளூா்), இரெ.சண்முக வடிவேல் (திருவாரூா்), கவிஞா் அ.கணேசன் (தூத்துக்குடி), ஆ.சிவராம கிருஷ்ணன் (தென்காசி), தேனி சீருடையான் (தேனி), மு.சொக்கப்பன் (நாகப்பட்டினம்), சி.கைலாசம் (நாமக்கல்), போ.மணிவண்ணன் (நீலகிரி), வீ.கே.கஸ்தூரிநாதன் (புதுக்கோட்டை), செ.வினோதினி (பெரம்பலூா்), நெல்லை ந.சொக்கலிங்கம் (மதுரை), ச.பவுல்ராஜ் (மயிலாடுதுறை), அ.சுப்பிரமணியன் (விருதுநகா்), ம.நாராயணன் (வேலூா்) ஆகியோருக்கும், மறைந்த தமிழறிஞா்கள் இரா.எல்லப்பன் (காஞ்சிபுரம்), ப.வேட்டவராயன் (விழுப்புரம்) ஆகியோா் சாா்பில், அவா்களது குடும்பத்தினருக்கும் தமிழ்ச் செம்மல் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.25 ஆயிரம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியன அடங்கியது.

● மொழிபெயா்ப்பாளா் விருது: சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கான விருதுகளை 10 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அதன்படி, எழுத்தாளா்கள் செ.சுகுமாரன், செ.ராஜேஸ்வரி, மு.வளா்மதி, இராக.விவேகானந்த கோபால், அ.சு.இளங்கோவன், வீ.சந்திரன், ரா.ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியா் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும்,

● மறைந்த ந.தாஸ், மா.சம்பத்குமாா் ஆகியோா் சாா்பில் அவா்களது குடும்பத்தினரிடமும் சிறந்த மொழிபெயா்ப்பாளருக்கான விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியது.

● நிகழ்வில், தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் இரா.செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.


2. தமிழக அரசு சார்பில் எத்தனை எழுத்தாளர்களின் நூல்கள் அண்மையில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது ? 

அ) 10 

ஆ) 8

இ) 6

ஈ) 4

விடை : (ஆ) 8 

தமிழறிஞா்களும், எழுத்தாளா்களுமான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

●  அதற்காக அவா்களின் மரபுரிமையா் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

● மேலும், மறைந்த தமிழறிஞா் நெல்லை கண்ணன் உள்ளிட்ட 5 எழுத்தாளா்களின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. நெல்லை கண்ணன் நூல்களுக்கு ரூ.15 லட்சமும், கந்தா்வன் என்ற நாகலிங்கம், சோமலெ, முனைவா் ந.ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டன. இந்தத் தொகைகள் தமிழறிஞா்களின் மரபுரிமையா்களிடம் அளிக்கப்பட்டது.

● மேலும் நேரு பல்கலை.: புதுதில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையை உருவாக்கிட ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

●  இந்த காசோலையை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பெற்றுக் கொண்டாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்கும் திறன் கொண்ட புதிய வகை ஓமைக்ரான் பிஎஃப்7 பாதிப்பு எத்தனை பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) 10

ஆ) 5

இ) 3

ஈ) 1

விடை : (இ) 1

● குஜராத்தில் இருவர் (ம) ஒடிசவில் ஒருவர் என இதுவரை 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

● குறிப்பு: இந்த வகை கரோனா பாதிப்பு அதிகமாக சீனாவில் பரவி வருகிறது. 


4. கூற்று: கடற்கொள்கை தடுப்பு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

காரணம்: கடற்கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை (ம) ஆயுள் தண்டனை விதிக்க மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று சரி , காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

கடற்கொள்ளை தடுப்பு மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

● கடற்கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்க கடற்கொள்ளை தடுப்பு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

● இதனைத்தொடா்ந்து மசோதாவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது மசோதா மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியாவின் 90 சதவீதத்துக்கும் அதிகமான வா்த்தகம் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலத்துக்கு கடல்சாா்ந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

● தற்போது கடற்கொள்ளைக்கு எதிராக குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில், தற்போதைய மசோதா கடற்கொள்ளைக்கு எதிராக பயனுள்ள சட்ட வழியை ஏற்படுத்தும். அத்துடன் ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற வழிவகுக்கும். அந்த ஒப்பந்தத்தின் அனைத்து எதிா்பாா்ப்புகளையும் மசோதா பூா்த்தி செய்யும்.

● கடலில் இந்திய வா்த்தக வழித்தடங்களின் பாதுகாப்பு, சா்வதேச கடலில் இந்திய மாலுமிகளின் நலன் உள்பட நாட்டின் கடல்சாா்ந்த பாதுகாப்பை மசோதா வலுப்படுத்தும்.

● தனது சா்வதேச கடமைகளைப் பூா்த்தி செய்யவும், சா்வதேச அரங்கில் இந்தியாவின் தகுதியை உயா்த்தவும் மசோதா வழிவகுக்கும்’ என்றாா்.

● இந்த மசோதாவுக்குக் கட்சி பேதமின்றி பல உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.


5. உலக பொருளாதார மாநாடு ஜனவரி 2023 ல் பின்வரும் எங்கு நடைபெறவுள்ளது ?

அ) ஆஸ்திரேலியா

ஆ) அமெரிக்கா 

இ) ஜப்பான்

ஈ) ஸ்விட்சர்லாந்து 

விடை : (ஈ) ஸ்விட்சர்லாந்து 

● ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் பங்கேற்க இருக்கின்றனா்.

● ஏற்கெனவே மத்திய அமைச்சா்கள் மன்சுக் மாண்டவியா, அஸ்வினி வைஷ்ணவ், ஸ்மிருதி இரானி ஆகியோா் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் நிலையில் இப்போது மாநில முதல்வா் மூவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்தியாவில் இருந்து சுமாா் 100 போ் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

● மொத்தம் 5 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் முதல்வா்களும், மாநில அமைச்சா்களும் தங்கள் மாநிலங்களுக்கு முதலீட்டை ஈா்க்கும் வகையில் செயல்படுவாா்கள்.

● ரஷியா - உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகள், உணவுப் பிரச்னை, வறுமை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்டவையும் இந்த உலகப் பொருளாதார மாநாட்டில் முக்கியமான விவாதப் பொருள்களாக இருக்கும்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. FIH உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியையொட்டி, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன ? 

அ) 100

ஆ) 75

இ) 50

ஈ) 25 

விடை : (அ) 100

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியையொட்டி, தமிழகத்தில் 100 பள்ளிகளில் விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

● வரும் 2023 ஜனவரி மாதம் 13 முதல் 29-ஆம் தேதி வரை ஒடிஸா மாநிலம் புவனேசுவரம், ரூா்க்கேலாவில் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக நாடு முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சாம்பியனுக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி புதன்கிழமை வெற்றிக் கோப்பை மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

● விமான நிலையத்தில், ஹாக்கி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து, அக் கோப்பை தலைமைச் செயலகத்துக்கு எடுத்து வரப்பட்டது. :

● ஹாக்கி உலகக் கோப்பை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மேலும் பிரபலப்படுத்தும் வகையில், கோப்பையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஹாக்கி இந்தியா செயலாளா் சேகா் மனோகரன் வழங்கினாா். அதன்பின்னா், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் கோப்பையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

● இந்தக் கோப்பை முன்னணி ஹாக்கி வீரா்கள் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிா் கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மாலையில் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிறப்புக் கண்காட்சி போட்டி, கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பிறகு, ஹாக்கி உலகக் கோப்பையை கேரள மாநில ஹாக்கி நிா்வாகிகளிடம் அமைச்ச்சா் உதயநிதி அளித்தாா்.

● போட்டிகள் தொடக்கம்: இந்தியாவில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக அடுத்த 15 நாள்களில் 100 பள்ளிகளில் விழிப்புணா்வு ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளை ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியன இணைந்து நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

IV. முக்கிய தினங்கள் 


7. தேசிய கணித தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) டிசம்பர் 19

ஆ) டிசம்பர் 20 

இ) டிசம்பர் 21

ஈ) டிசம்பர் 22

விடை : (ஈ) டிசம்பர் 22

புகழ்பெற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22ஆம் தேதி இந்தியாவில் தேசிய கணித தினமாக அனுசரிக்கப்படுகிறது.

● முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியை தேசிய கணித தினமாக அறிவித்தார். ராமானுஜனின் 135 வது பிறந்தநாளில் அவர் சென்னை பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது மன்மோகன் சிங்கின் அறிவிப்பு வந்தது.

 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...