Sunday, January 7, 2024

தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024 - GKSHANKAR Current Affairs


தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024

 அறிமுகம் 

தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024”- தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ஜனவரி 4, 2024 அன்று வெளியிடப்பட்டது. 

தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்ந்தும்,தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி உறுதி செய்யும் நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

தென்னை நார் தொழில்துறையில் 2030 ஆம் ஆண்டிற்குள் 3000 கோடி முதலீட்டை ஈர்த்தல்.

தென்னை நார் தொழில்துறையில் 60,000 வேலை வாய்ப்புகளை 2030-ம் ஆண்டிற்குள் உருவாக்குதல்.

 தென்னை நார் தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது.

தென்னை நார் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உற்பத்தி செய்தலை ஊக்குவித்தல்.

நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதி செய்வது மற்றும் தொழிற் நிறுவன சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி நடவடிக்கை மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் முதலீடு செய்த அனைத்து பங்குதாரர்களையும் பயன்பெறச் செய்தல்.

கூட்டு அணுகு முறையின் மூலம், இத்தொழில்துறையின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அதன் முன்னேற்ற இலக்கை அடைவதற்கான தீர்வுகளை வழங்குவதையும் உறுதி செய்தல்.

 தென்னை நார் தொழில் கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் முன்னிருத்தலை ஊக்குவித்தல்

உலகத் தரத்திலான மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான அதிநவீன ஆய்வகம் அமைத்தல். 

தென்னை நார் தொழிலில் நிலையான, சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட நடைமுறைகளை மேம்படுத்துதல்.

சிறப்பம்சங்கள் 


முதலீட்டு ஈர்ப்பு:

ஒற்றைச் சாளர முறை மற்றும் தொழில் முதலீட்டாளர்க்கான உகந்த சூழ்நிலை ஆகியவற்றின் மூலம் தென்னை நார் சார்ந்த தொழிலில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்புகளுடன் கூட்டாண்மைக்கான அடித்தளத்தை இந்தக் கொள்கை அமைக்கிறது. 

இம்முயற்சிகள் தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு புதிய வழிகளையும், உலகளாவிய அறிதல் ஆகியவற்றை முன்னெடுக்கும்.

 தென்னை நார் சார்ந்த தொழில் துறையில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இந்தக் கொள்கையின் மூலம் அடைய இயலும்.

சிறப்பு மையங்கள்:

 தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்காக பிரத்யேகமான சிறப்பு மையங்களை உருவாக்குவது தென்னை நார் கொள்கையின் நோக்கமாகும். 

இம்மையங்கள் புதிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் தோட்டக்கலையில் மண்ணில்லா வளர்ப்பு ஊடக பயன்பாடு, புத்தொழில்கள் மற்றும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பயன்பாடு, தென்னை நார் சார்ந்த தொழில்களின் போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.


 சந்தை விரிவாக்கம்:

உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சந்தையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும். 

உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகளுக்காக தென்னை நார் சார்ந்த நிறுவனங்கள் வர்த்தக் கண்காட்சிகளில் பங்கு பெறுவதை உறுதி செய்தல்.

சமச்சீர் தொழில்மயமாக்கல், சமூக சமபங்கு, சுழற் பொருளாதார நடைமுறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏற்றுமதி வாய்ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசு திட்டங்களில் புவி விரிப்பு போர்வை (Geo Textiles) போன்ற தென்னை நார் பொருட்களின் பங்களிப்பின் வாயிலாக சந்தை விரிவாக்கத்தை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


 உள்கட்டமைப்பு மேம்பாடு:

தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கிட கிடங்குகளை நிறுவுதல் மற்றும் குழும மேம்பாடு ஆகியவை தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும்.


 போட்டித்தன்மை மற்றும் தரக்கட்டுப்பாடு:

தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல், மதிப்புக்கூட்டல் மற்றும் ஏற்றுமதி வணிக மேம்பாட்டிற்கான கருத்துப்பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட போட்டித்தன்மையை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது.

 ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய தென்னை நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை விரைவாக மேம்படுத்த இக்கொள்கை வழிவகுக்கும்.

தென்னை நார் தொழில் துறை

தமிழ்நாட்டில் சுமார் 4.46 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டர் பரப்பளவில் 10,484 தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தென்னை நார் தொழில்துறையில் 5,331 கோடி மொத்தம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னை நார் தொழில்துறையின் நிகர மதிப்பு 5368 கோடி ஆகும்.

தென்னை நார் தொழில் துறையின் ஏற்றுமதி மதிப்பு 20186 கோடி ஆகும்.

தேசிய தென்னை நார் வாரியம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு தென்னை நார் தொழில் மேம்பாட்டு கழகம் ஆகஸ்ட் 5, 2022 இல் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.


முடிவுரை

“தென்னை நார் கொள்கை 2024”-கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், மகளிர் வேலைவாய்ப்பு, தென்னை விவசாயிகளுக்கான வருமானத்தினை அதிகரித்தல் புதுமை, போட்டித்திறன் மற்றும் பொறுப்புடன் கூடிய நிலையான வளர்ச்சி மூலம் புதிய சகாப்தத்தை அடைய வழிகோலுகிறது




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...