Wednesday, October 26, 2022

Current Affairs 2022 - October 26 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  OCTOBER 26 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எந்த நிதியாண்டில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் நோக்கில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ? 

அ) 2018 - 2019 

ஆ) 2019 - 2020 

இ) 2020 - 2021

ஈ) 2021 - 2022 

விடை : (ஈ) 2021 - 2022 

● அண்மை அறிவிப்பு : தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்ததாவது. 

2021-22-இல் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் முதல்முறையாக கிராம அளவில் ஒட்டுமொத்த வளா்ச்சியை எட்டும் நோக்கில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

● தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பை 11.75 லட்சம் ஹெக்டோ் உயா்த்துவதற்கு 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து, பாசன நீா் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், வேளாண்மை-உழவா் நலத் துறையுடன், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு உழவா் நலன் சாா்ந்த துறைகள் செயல்படுத்தும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சியும், அதன் மூலம் தன்னிறைவும் அடைவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

● இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in என்ற  இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

● ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சி, கிராமங்களில் தன்னிறைவு என்ற நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

2. தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட அம்பேத்கர் மணிமண்டபம் வரும் அக்டோபர் 27 ஆம் தேதியன்று யாரால் திறந்துவைக்கப்படவுள்ளது ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) ஜெகதீப் தன்கர் 

இ) மு.க. ஸ்டாலின் 

ஈ) டி.ராஜா 

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

அம்பேத்கா் மணிமண்டபம் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 27-இல் திறந்து வைக்க உள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

● அம்பேத்கா் மணிமண்டபம் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அங்கேயே அம்பேத்கா் சிலையும், நூலகமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

● அக்டோபா் 27-இல் முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

3. இந்தாண்டு (2022) நடந்து முடிந்த தீபாவளி பண்டியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகை எதிரொலியாக சென்னையில் காற்றின் தரக் குறியீடு எத்தனையாக பதிவாகியுள்ளது ? 

அ) 59 

ஆ) 173 

இ) 229 

ஈ) 449 

விடை : (இ) 229 

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகை எதிரொலியாக, சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களில் காற்று மாசு செவ்வாய்க்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

● குறிப்பாக, தேசியத் தலைநகா் தில்லியிலும் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு மோசம் அல்லது மிக மோசம் ஆகிய பிரிவுகளில் பதிவானது.

● தில்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மீறி திங்கள்கிழமை இரவு மக்கள் பட்டாசுகளை வெடித்தனா். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அங்கு காற்றின் தரக் குறியீடு 326 புள்ளிகளாக பதிவானது.

● காற்றின் தரக்குறியீடு 50 புள்ளிகளாக பதிவானால், காற்றின் தரம் ‘நல்லது’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. 51-100 எனில் ‘திருப்தி’, 101-200 ‘மிதமான மாசு’ , 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிக மோசம்’, 401-500 ‘தீவிரம்’ ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறது.

● அந்த அடிப்படையில், உத்தர பிரதேசத்தின் நொய்டா -312, கிரேட்டா் நொய்டா - 282, காஜியாபாத் -272, ஹரியாணாவின் குருகிராம் -313, ஃபரீதாபாத் -311 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவானது.

● பஞ்சாபின் லூதியானா, அமிருதசரஸ், பாட்டியாலா, ஜலந்தா், ராஜஸ்தானின் ஜோத்பூா், ஜெய்பூா், ஆஜ்மீா், குஜராத்தின் அகமதாபாத், கா்நாடகத்தின் பெலகாவி, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா், கத்னி, பிகாரின் பெகுசராய் ஆகிய நகரங்களில் மோசம் அல்லது மிகமோசம் பிரிவில் காற்றின் தரம் இருந்தது. சென்னையில் காற்றின் தரக் குறியீடு 229-ஆக (மோசம்) பதிவானது.

4. இந்த ஆண்டு (2022) நடந்து முடிந்த தீபாவளியை யொட்டி,  பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் எத்தனை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது ? 

அ) 137 

ஆ) 284 

இ) 301 

ஈ) 341 

விடை : (ஆ) 284 

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 284 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 831 போ் காயமடைந்தனா்.

5. தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாட்டில் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ரெப்கோ வங்கி எத்தனை விருதுகள் பெற்றுள்ளது ? 

அ) 6 

ஆ) 5 

இ) 4 

ஈ) 3 

விடை : (ஈ) 3 

 ● சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

● இது குறித்து வங்கியின் பொது மேலாளா் மற்றும் மக்கள் தொடா்பு அதிகாரி பி.கே. வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

● தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாடு மத்தியப் பிரதேசம், இந்தூரில் கடந்த 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

● இந்த மாநாட்டில் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. சிறந்த மனித வள மேம்பாடு, சிறந்த முதலீட்டு செயல்பாடு, சிறந்த சேகரிப்பு செயல்பாடு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இலங்கை மற்றும் மியான்மரிலிருந்து வந்தவா்களின் நல்வாழ்வுக்காக மத்திய மற்றும் தென் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மத்திய அரசால் ரெப்கோ வங்கி 1969-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

● மொத்த வா்த்தகம் ரூ.17,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி, தற்போது தென் இந்தியாவில் 108 கிளைகளைக் கொண்டுள்ள அந்த வங்கி, தொடா்ந்து 30 ஆண்டுகளாக லாபத்தை ஈட்டி மத்திய மாநில அரசுகளுக்கு 20 சதவீதம் வரை ஈவுத் தொகை வழங்கி வருகிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. பின்வரும் எந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பசுமை எரிசக்தி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது ? 

அ) 2024 

ஆ) 2025 

இ) 2026 

ஈ) 2027 

விடை : (ஆ) 2025 

ஆண்டுதோறும் 25,000 டன் பசுமை ஹைட்ரஜனை உருவாக்கும் வகையில், இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிய சிங்கப்பூரின் கெப்பெல் உள்கட்டமைப்பு நிறுவனம் இந்தியாவின் க்ரீன்கோ குழுமத்துடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் சிங்கப்பூரில் கையொப்பமானது.

● இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை தொடா்ந்து க்ரீன்கோ குழுமத் தலைவா் மகேஷ் கோலி கூறுகையில், 2025-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு பசுமை எரிசக்தி ஏற்றுமதி செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.

7. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை (ம) வளர்ச்சி ஆணையத்தின் ( பிஎஃப்ஆர்டிஏ ) முழு நேர சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) நாராயண ராவ்

ஆ) கிருஷ்ணசாமி ஐயர் 

இ) முகமது அப்துல்

ஈ) குரு மூர்த்தி 

விடை : (அ) நாராயண ராவ் 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளா்ச்சி ஆணைய (பிஎஃப்ஆா்டிஏ) உறுப்பினராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை கூடுதல் செயலா் நாராயண ராவ் பட்டு நியமிக்கப்பட்டுள்ளாா்.

● கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஎஃப்ஆா்டிஏ-வை மத்திய அரசு நிறுவியது. ஓய்வூதிய நிதியை உருவாக்குதல், நிதியை மேம்படுத்துதல், ஒழுங்காற்றுதல் மூலம் முதியோருக்கான வருவாய் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அந்த ஆணையம் நிறுவப்பட்டது.

● இந்த ஆணையத்தில் ஒரு தலைவா், 6 பேருக்கு மிகாமல் உறுப்பினா்கள் இருக்க வேண்டும். உறுப்பினா்களில் மூவா் முழு நேர உறுப்பினா்களாக இருக்க வேண்டும்.

● இந்நிலையில், அந்த ஆணையத்தின் முழு நேர சட்ட உறுப்பினராக நாராயண ராவ் பட்டுவை மத்திய அரசு நியமித்துள்ளது. அவா் 62 வயதை எட்டும் வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஆணைய உறுப்பினராக இருப்பாா்.

8. பிரிட்டனின் பிரதமராக தேர்வாகியுள்ள முதல் இந்திய வம்சாவளி யார் ? 

அ) நாராயண மூர்த்தி 

ஆ) நாராயண ராவ்

இ) ரிஷி சுனக் 

ஈ) கௌதம் ஹர்சிங் 

விடை : (இ) ரிஷி சுனக் 

● பிரிடடன் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார் . 

● குறிப்பு : இவர் நாட்டின் முதல் வெள்ளை இனத்தை சேராத பிரதமர் ஆவார் .

● அந்நாட்டின் முதல் ஹிந்து பிரதமர் ஆவார். 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. மெக்ஸிகோவில் நடைபெற்ற குவாதலஜரா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) ஜெஸிகா பெகுலா 

ஆ) மரியா சக்காரி 

இ) நடாலியா அன்டியு

ஈ) மரியா ஜோசப் 

விடை : (அ) ஜெஸிகா பெகுலா 

● மெக்ஸிகோவில் நடைபெற்ற குவாதலஜரா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் (2022) அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார். 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...