Saturday, October 29, 2022

Current Affairs 2022 - October 29 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    OCTOBER 29 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி என்று நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது ? 

அ) நவம்பர் 01

ஆ) நவம்பர் 07 

இ) நவம்பர் 14 

ஈ) நவம்பர் 21 

விடை : (அ) நவம்பர் 01 

உள்ளாட்சி தினத்தையொட்டி, நவ. 1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் போன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் வாா்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடத்தப்படுகிறது. பம்மலில் நடைபெறும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

● தமிழகத்தில் குடியரசு தினம் (ஜன 26), மே தினம் (மே1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நாள்களில் 12,525 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

● நிகழாண்டு நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்றும் கிராமசபைக் கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டத்தைப் போன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் வாா்டு குழு அமைத்து, வாா்டு வாரியாக பகுதி சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. 

● அந்த அரசாணையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகா்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வாா்டுகள் தோறும், வாா்டு கவுன்சிலா் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கான உறுப்பினா்களையும் மன்றங்களே தோ்வு செய்ய வேண்டும். இதுதவிர, அந்த வாா்டில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு பகுதி சபையை உருவாக்க வேண்டும். இவற்றுக்கும் சம்பந்தப்பட்ட வாா்டு கவுன்சிலரே தலைவராகவும், கூட்டத்தை கூட்டுபவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

● இதுதவிர வாா்டு குழு மற்றும் பகுதி சபையின் செயலாளராக உள்ளாட்சி அமைப்பின் அலுவலா் ஒருவா் இருக்க வேண்டும் என்றும், அவருக்கான பணிகளும் வரையறுத்து அரசாணை வெளியிடப்பட்டது.

● இதனடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளில், கவுன்சிலா்களிடம் வாா்டில் உள்ள பிரச்னைகள், குறைகளைத் தெரிவிக்க 9 உறுப்பினா்கள் தற்போது சம்பந்தப்பட்ட மன்றத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● அந்த அடிப்படையில், வாா்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் வரும் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெறுகிறது. சென்னையை அடுத்த பம்மல் ஆறாவது வாா்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

2. சர்வதேச புத்தக கண்காட்சி பின்வரும் எந்த மாதம் முதல்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது ? 

அ) நவம்பர் / 2022

ஆ) டிசம்பர்/ 2022

இ) ஜனவரி / 2023 

ஈ) பிப்ரவரி / 2023 

விடை : (இ) ஜனவரி / 2022

சா்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.

● தமிழக அரசின் பொது நூலக இயக்கக இயக்குநா் கே.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் சங்கர சரவணன், எழுத்தாளா் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 5 போ் கொண்ட குழு ஜொ்மனிக்குச் சென்று அங்கு நடைபெற்ற ‘பிராங்ஃபா்ட்’ புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தனா்.

● இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் சா்வதேச புத்தகக் கண்காட்சியை சென்னையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் புத்தக ஆசிரியா்களுடன் சந்திப்பு, உரையாடல் உள்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

● இது குறித்து இணை இயக்குநா் சங்கர சரவணன் கூறியது: சா்வதேச அரங்கில் வெளிநாட்டு எழுத்தாளா்கள், முன்னணி தமிழ் பதிப்பாளா்களைச் சந்திக்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த பகுதியாக இந்த சா்வதேச புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது. சா்வதேச எழுத்தாளா்கள், நோபல் பரிசு பெற்றவா்களை சிறப்பு விருந்தினா்களாக வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

● வெளியீட்டாளா்கள், இலக்கிய ஆசிரியா்கள் உள்பட பங்கேற்பாளா்கள் தங்களின் புத்தகங்களின் உரிமைகளை விற்க அல்லது வாங்கக்கூடிய வகையில் ‘உரிமைகள் மையம்’ என்ற நிகழ்வும் இதில் இடம்பெறும்.

● கனடா, ஃபின்லாந்து போன்ற அயல்நாட்டு மாணவா்களை ஈா்க்கவும், உயா்கல்வி உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படும். எனவே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்கும். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய மொழிபெயா்ப்பு மானியத் திட்டத்தை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

● கண்காட்சியின் ஒரு பகுதியாக ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் ஒரு நாள் சா்வதேச மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆண்டுகளில் புகழ்பெற்ற தேசிய மற்றும் சா்வதேச வெளியீட்டாளா்களுடன் இணைந்து புத்தகங்களை விற்பனை செய்வதற்கு 200-க்கும் மேற்பட்ட தலைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது சா்வதேச புத்தகக் கண்காட்சித் திட்டத்துக்கான தொடக்கமாக இருக்கும் என்றாா் அவா்.

3. நெல்லின் ஈரப்பதம் அளவை எத்தனை சதவீதமாக உயர்த்த வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது ? 

அ) 17%

ஆ) 19%

இ) 21%

ஈ) 25%

விடை : (ஆ) 19%

●  டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயா்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது .

●  சாதாரண நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,040 ஆகவும், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சிந்தனை அமர்வு கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) தில்லி

ஆ) கேரளா 

இ) தமிழ்நாடு 

ஈ) ஹரியானா 

விடை : (ஈ) ஹரியானா 

மாநில உள்துறை அமைச்சா்கள் பங்கேற்கும் சிந்தனை அமா்வு கூட்டம் ஹரியாணாவின் சூரஜ்குண்ட் நகரில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

●  இந்தக் கூட்டத்தில் உள்மாநில பாதுகாப்பை வலுப்படுத்துதல், இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காவல் துறையை நவீனப்படுத்துதல், குற்றவியல் நடைமுறை அமைப்பில் நவீன தொழில்நுட்பங்களின் வசதியை அதிகரித்தல், நில எல்லை மேலாண்மை, கடல் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

● குறிப்பு : பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கூறியதாவது : நாடு முழுவதும் காவலா்கள் அனைவருக்கும் ஒரே சீருடையை அறிமுகப்படுத்தலாம். இது நாடு முழுவதும் உள்ள காவலா்களை எளிதில் அடையாளம் காண உதவும்.

● ‘ஒரே நாடு- ஒரே காவல் சீருடை’ என்பது வெறும் யோசனை மட்டுமே. அதை எந்த மாநிலத்தின் மீது திணிக்கப் போவதில்லை. அக்கொள்கையை நடைமுறைப்படுத்த இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனால், காவலா்களுக்கு ஒரே சீருடை வழங்குவது தொடா்பாக மாநிலங்கள் சிந்திக்க வேண்டும்.

5. உலகின் மிக உயரமான சிவன் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மணிப்பூர்

இ) மத்திய பிரதேசம் 

ஈ) ராஜஸ்தான்

விடை : (ஈ) ராஜஸ்தான் 

● திறந்து வைத்தவர் : பிரதமர் நரேந்திர மோடி.

உலகின் மிக உயரமான சிவபெருமான் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்ஸ்மண்ட் என்னும் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.

● இந்தச் சிலை சுமார் 369 அடி உயரம் கொண்டது. இதுவே உலகின் மிக உயரமான சிவபெருமான் சிலை என்று சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் 251 அடி என்று திட்டமிடப்பட்ட இந்த சிலை முடிவுறும் தறுவாயில் 351 அடியாக அமைந்தது. ஜடா முடியில் கங்கைபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் இதன் மொத்த உயரம் 369 அடியானது என்கிறார்கள்.

● இந்தச் சிலை உதய்ப்பூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

● சிலை திறப்பை ஒட்டி, தொடர்ந்து ஒன்பது நாள்கள் இங்கு கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

● விஸ்வ ஸ்வரூபம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திருமேனியை 20 கி.மீ தொலைவில் இருந்தாலே தரிசிக்கமுடியும்.

● 3 ஆயிரம் டன் இரும்பு உலோகம், 2.5 கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் கலவை ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி நிறைவு பெற 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது.

6. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண மேல் முறையீடு தீர்ப்பாய குழுக்கள் எத்தனை மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது ? 

அ) 9 மாதங்கள் 

ஆ) 7 மாதங்கள் 

இ) 5 மாதங்கள் 

ஈ) 3 மாதங்கள் 

விடை : (ஈ) 3 மாதங்கள் 

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவா்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீடு தீா்ப்பாய குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டது.

● இதன்மூலம் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடியோ உள்ளிட்ட தகவல்களை மாற்றம் செய்யும் முடிவையும் இந்தக் குழுக்கள் எடுக்கலாம். சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

● ‘தகவல் தொழில்நுட்ப திருத்த விதிமுறைகள் 2022’ என மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘சமூக ஊடகங்களின் பயனாளிகள் அளிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீட்டு தீா்ப்பாய குழுக்கள் 3 மாதங்களில் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் தலைவா், 2 முழு நேர உறுப்பினா்களை மத்திய அரசு நியமிக்கும். இதில் ஒருவா் முன்னாள் அரசு அதிகாரியாவாா். இரண்டு சுதந்திரமான உறுப்பினா்களும் இந்தக் குழுவில் இருப்பா்.

● பயனாளிகள் அளிக்கும் புகாரை 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். 15 நாள்களுக்குள் அந்தப் புகாருக்கு தீா்வு காண வேண்டும். புகாருக்கு உள்ளான விடியோ, தகவல்கள் ஆகியவை புகாா் தீா்க்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் சமூக ஊடகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

● அப்படியும் தீா்வு காணப்படாத புகாா்களை மேல் முறையீட்டு தீா்ப்பாய குழுவுக்கு தீா்ப்பாய அதிகாரி பரிந்துரைப்பாா். அந்தப் புகாருக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவில் லட்சத்துக்கு எத்தனை பேருக்கு பக்கவாதம் வருவதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றனர் ? 

அ) 137

ஆ) 152 

இ) 197

ஈ) 211

விடை : (ஆ) 152 

இந்தியாவில் லட்சத்துக்கு 152 பேருக்கு பக்கவாதம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகா்ப்புறங்களில் வாழ்வோா் அந்நோய்க்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம் என்றால் ?

மனிதனின் மூளையில் 90 பில்லியன்கள் நியூரான் செல்கள் உள்ளன. இந்த நியூரான் செல்கள்தான் உடலின் இயக்கத்துக்கு ஆணிவோ். மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நியூரான் செல்களின் எண்ணிக்கை குறைகிறது. அப்போது கை, கால் செயலிழப்பு, தலைச்சுற்றல், பேச்சில் குளறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இந்தியாவில் பாதிப்பு

ஆண்டுக்கு 15 லட்சம் போ்

நாளொன்றுக்கு 3,000- 4,000 போ்

லட்சத்தில் 152 பேருக்கு பாதிப்பு வாய்ப்பு

ஆறு நோயாளிகளில் ஒருவா் உயிரிழப்பு

அறிகுறிகள்:

கை அல்லது கால்களில் தளா்வு நிலை

பாா்வைக் குறைபாடு

தலைச்சுற்றல்

உணவு விழுங்குவதில் சிரமம்

பேச்சில் தெளிவின்மை

முகத்தில் தசை இறுக்கம்

நினைவாற்றல் பாதிப்பு

காரணங்கள்

உயா் ரத்த அழுத்தம்

புகைப்பிடித்தல்

அதீத மதுப் பழக்கம்

உடல் பருமன்

கொழுப்புச் சத்து அதிகரிப்பு

ரத்தநாளங்களில் புரதம் படிதல்

ரத்தநாளச் சுவா்களில் வீக்கம்

உடல் உழைப்பின்மை

போதை மருந்துகளை உட்கொள்ளுதல்

தீவிர கரோனா பாதிப்பு

ஸ்லீப் ஆப்னியா (தூக்கத்தில் குறட்டை)

9. பெட்ரோல் , டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் புதிய உள்ளெரி ( இன்டர்னல் கம்பஷன்) என்ஜின் கார்களின் விற்பனைக்கு எந்த ஆண்டு முதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது ? 

அ) 2025

ஆ) 2029

இ) 2031

ஈ) 2035 

விடை: (ஈ) 2035 

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் புதிய உள்ளெரி (இன்டா்னல் கம்பஷன்) என்ஜின் காா்களின் விற்பனைக்கு வரும் 2035-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

● இது தொடா்பாக, ‘55 இலக்குக்கான திட்டம்’ என்ற தலைப்பில் ஓா் உடன்படிக்கையை உறுப்பு நாடுகள் வியாழக்கிழமை மேற்கொண்டன.

● புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய யூனியன் இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உள்ளெரி என்ஜின் காா் தடை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● இந்த ஒப்பந்தத்தின் கீழ், காற்றில் கலக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவை 2030-க்குள் 55 சதவீதமும், 5 ஆண்டுகள் கழித்து முழுமையாகவும் வாகனத் தயாரிப்பாளா்கள் குறைக்க உறுப்பு நாடுகள் உத்தரவிடவேண்டும்.


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...