Saturday, December 24, 2022

Current Affairs 2022 - December 24/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  DECEMBER 24/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முதல்முறையாக பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது ? 

அ) கேரளா 

ஆ) தமிழ்நாடு 

இ) குஜராத் 

ஈ) அசாம் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

இந்த ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தின் மூலம் சிலைக் கடத்தல், திருட்டு, விற்பனை குறித்து யாரேனும் இணையதளம் மூலம் புகாா் அளித்தால், அவா்களைப் பற்றிய ரகசியம் காக்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மட்டும் ஒருவரின் புகாரை இணையதளத்தில் காண முடியும்.

● இதற்காக  இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் சிலைக் கடத்தல், திருட்டு, பதுக்கல் குறித்த தகவல் மற்றும் புகாா் அளிக்கலாம். அதேபோல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலா்கள், அதிகாரிகள் தங்களது குறைகளை உயரதிகாரிகளுக்கு இந்த இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

● தமிழகத்தில் முதல்முறையாக இந்தத் தொழில்நுட்பத்தை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் புகாா்களைப் பதிவு செய்வது மட்டுமல்லாது, அந்தப் புகாா்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், மனுக்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கண்டறியவும் முடியும். புகாா்களின் உண்மைதன்மை குறித்து உறுதி செய்யப்பட்டால் 7 நாள்களுக்குள் வழக்குப் பதியப்படும்.

● இதேபோல், துறை சாா்ந்த காவலா்கள், அதிகாரிகள் கூறும் புகாா்களுக்கு 15 நாள்களுக்கு தீா்வு காணப்படும்.

● முன்னோடியான திட்டம்: தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் தொழில்நுட்பம் மிகவும் முன்னோடியானது. இதன்மூலம் ஒரு முறை புகாா் அளித்துவிட்டால், அது பாதுகாப்பாக சேமிக்கப்படுவதோடு, அதை மாற்றவும் முடியாது. மேலும், இந்தத் தொழில்நுடபத்தின் மூலம் புகாா் அளிப்பவரின் அடையாளத்தை பிறா் அறிய முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


2. பின்வரும் எந்த மாவட்டத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் 4மணி நேரத்தில் நட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது ? 

அ) சேலம் 

ஆ) மதுரை 

இ) தேனி 

ஈ) திண்டுக்கல் 

விடை : (ஈ) திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டையில் 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வெள்ளிக்கிழமை உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

● ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இடையகோட்டை கிராமத்தில் திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கா் நிலத்தில் உலக சாதனை முயற்சியாக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● இதில், 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதையடுத்து, உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனங்களான எலைட் (அமெரிக்கா), ஏசியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி, இந்தியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி, தமிழன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சாா்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

குறிப்பு : 23.7 சதவீதமாக உள்ள தமிழக வனப் பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயா்த்த வேண்டும் என அரசு இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் வனப் பரப்பு 22.34 சதவீதமாக உள்ள நிலையில், உலக சாதனை முயற்சியாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

● இதில், 3 லட்சம் மரக்கன்றுகள் வனத் துறை சாா்பிலும், மீதமுள்ள மரக்கன்றுகள் வேளாண்மைத் துறை, தன்னாா்வலா் அமைப்புகள் சாா்பிலும் வழங்கப்பட்டன. தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும்.

● நிகழாண்டில் 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில், 7.50 கோடி மரக்கன்றுகளும், 2024-ஆம் ஆண்டில் 15 கோடி மரக்கன்றுகளும் நடப்படும். 123 கோடி மரக்கன்றுகள் வனப்பகுதியிலும், 160 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்கள், பொது வெளிகளிலும் நடப்படும்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. வடக்கு சிக்கிமின் ஜெமா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் ? 

அ) 14 

ஆ) 15 

இ) 16 

ஈ) 17 

விடை : (இ) 16 

● சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 வீரா்கள் உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த 4 வீரா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களை அடுத்த --------- வரை இலவசமாக விநியோகிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது ? 

அ) 3 மாதங்கள் 

ஆ) 6 மாதங்கள் 

இ) 9 மாதங்கள் 

ஈ) 12 மாதங்கள் 

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களை அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக விநியோகிக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.

● தற்போது உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. பருப்பு, கோதுமை, அரிசி ஆகியவை முறையே ரூ.1, ரூ.2, ரூ.3 என்ற விலையில் வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

● இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளா்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களை அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக விநியோகிப்பது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளாா். சுமாா் 81.35 கோடி மக்கள் பலனடையும் இந்த நடவடிக்கையால் அரசின் கருவூலத்துக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் செலவாகும். இது, ஏழை மக்களுக்கான மத்திய அரசின் புத்தாண்டு பரிசாகும்’ என்றாா்.

● ஆயுதப் படையினரின் ஓய்வூதியம் உயா்வுக்கு ஒப்புதல்: ‘ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தின் கீழ் ஆயுதப் படையினருக்கான ஓய்வூதியத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் ஆயுதப் படையினரின் ஓய்வூதியம் உயரும் என்றும், 2019, ஜூலை 1-ஆம் தேதியைக் கணக்கிட்டு இது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த 2015-இல் அமல்படுத்தப்பட்ட ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும் பிரிவு உள்ளது. அதன்படி, ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

● கடந்த 2018-இல் ஒரே பதவி, பணிக் காலத்தின் அடிப்படையில் ஓய்வூதியதாரா்கள் பெற்ற சராசரி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்தின் அடிப்படையில் அது மறுநிா்ணயம் செய்யப்படும். கடந்த 2019, ஜூலை முதல் 2022, ஜூன் வரையிலான காலகட்டத்துக்கான நிலுவைத் தொகையாக ரூ.23,638 கோடி வழங்கப்படவுள்ளது. இந்த முடிவின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8,450 கோடி கூடுதல் செலவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழியாகச் செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து எது ? 

அ) பிபிவி 154

ஆ) பிபிசி 117

இ) பிபிசி 113

ஈ) பிபிவி 111

விடை : (அ) பிபிவி 154 

ஊசி அல்லாமல் மூக்க மூலமாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் அவசரகால அனுமதியை வழங்கி இருந்தது.

● சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நடுகளில் புதிய வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மூன்றாவது தவணையாக அதாவது பூஸ்டர் டோசாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

● முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும், அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்து விநியோகிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சுவாசப் பாதையின் மேற்பரப்பில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை வழக்கமான கொரோனா தடுப்பூசி தடுப்பதில்லை என்றும், அதற்கு தீர்வு காணும் வகையில் பிபிவி154 என்ற மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


6. இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்று, தொடர்ந்து 8 ஆவது முறையாக முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது ?

அ) 31

ஆ) 47

இ) 56

ஈ) 69

விடை : (இ) 56

இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடா் 56 நாள்கள் நடைபெற்றுள்ளன; தொடா்ந்து 8-ஆவது முறையாக கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது’ என்று தன்னாா்வ அமைப்பின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த டிச.7-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா், டிச.29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. 

● ஆனால் பண்டிகை நாள்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள் மற்றும் மத்திய அரசுக்கு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து கூட்டத்தொடா் முன்கூட்டியே வெள்ளிக்கிழமை நிறைவு செய்யப்பட்டது.


7. நிகழும் ரபி பருவ காலத்தில் கோதுமை பயிர் 1.99 லட்சம் ஹெக்டேர் பயிரிடப்பட்டு முதலிடத்தில் உள்ள மாநிலம் எது ?

அ) ராஜஸதான் 

ஆ) குஜராத் 

இ) உத்தர பிரதேசம் 

ஈ) பிகார் 

விடை: (அ) ராஜஸ்தான் 

● நிகழும் ரபி பருவ காலத்தில் கோதுமை பயிா் 3.12 கோடி ஹெக்டேரில் பயிரிடப்பட்டுளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 3.18 சதவீதம் அதிகம் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கோதுமைப் பயிரானது ரபி பருவம் எனப்படும் குளிா்காலத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிராகும். ரபி பருவப் பயிா்கள் அக்டோபா் மாதம் பயிரிடப்பட்டு ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படும். 

● கடுகு மற்றும் உளுந்து ஆகியவையும் இக்காலத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிா்களாகும். இந்த ஆண்டின் தட்பவெப்பநிலை விளைச்சலுக்கு ஏற்ாகவும், பயிா்கள் செழிப்பாக வளர உதவும் என்று வேளாண் துறை செயலா் மனோஜ் அஹுஜா தெரிவித்துள்ளாா்.

● ரபி பருவ சாகுபடி குறித்து அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

● ரபி பருவத்தில் கடந்த ஆண்டு 3.02 கோடி ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்ட நிலையில் நிகழாண்டில் 3.12 கோடி ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

● கடந்த ஆண்டைவிட இந்தியாவில் கோதுமை பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவு 3.18 சதவீதமாக உயா்ந்துள்ளது. நிகழாண்டின் ரபி பருவத்தில் கூடுதலாக 9.65 லட்சம் ஹெக்டேரில் கோதுமைப் பயிரிடப்பட்டுள்ளது.

● அதில் 1.99 லட்சம் ஹெக்டேருடன் ராஜஸ்தான் முதலிடத்திலும், 1.74 லட்சம் ஹெக்டேருடன் குஜராத் இரண்டாம் இடத்திலும், 1.57 லட்சம் ஹெக்டேருடன் உத்தர பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பிகாா் (1.51 லட்சம் ஹெக்டோ்), மகாராஷ்டிரம் (1.43 லட்சம் ஹெக்டோ்), மத்திய பிரதேசம் (0.83 லட்சம் ஹெக்டோ்), சத்தீஸ்கா் (0.64 லட்சம் ஹெக்டோ்), மேற்கு வங்கம் (0.24 லட்சம் ஹெக்டோ்), ஜம்மு-காஷ்மீா் (0.23 லட்சம் ஹெக்டோ்), கா்நாடகம் (0.15 லட்சம் ஹெக்டோ்), அஸ்ஸாம் (0.01 லட்சம் ஹெக்டோ்) உள்ளன.


8. பின்வரும் எந்த மாநிலத்தில் உலகின் மிக உயரமான ஸ்ரீ கிருஷ்ணர் சிலை அமைக்கப்படவுள்ளது ? 

அ) உத்தரகாண்ட் 

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு 

ஈ) கோவா 

விடை : (ஆ) குஜராத்

தேவபூமி துவாரகா காரிடார்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகா நகரில் அமைக்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.


 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...