Monday, December 26, 2022

Current Affairs 2022 - December 26/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 December 26 /2022


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. தமிழகத்திலுள்ள 35,000 நியாய விலைக் கடைகளில் இதுவரை எத்தனை கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 4,517

ஆ) 6,919

இ) 8,121

ஈ) 10,225 

விடை : (அ) 4,517 

தமிழகத்தில் 4,517 நியாயவிலை கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

● கூட்டுறவு, உணவுத் துறை சார்பில்தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் செயல்படுகின்றன. இதுதவிர, இரு துறைகள் சார்பிலும் உணவுப் பொருள் கிடங்குகளும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.

● இதுவரை 4,517 நியாயவிலை கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளன. மேலும், 2,800நியாயவிலை கடைகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. பொதுமக்கள் எளிதில்அணுகும் வகையில் அந்த கடைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முழுநேர கடைகள், 10 ஆயிரத்து்க்கும் மேற்பட்ட பகுதிநேர கடைகள் செயல்பட்டு வருகின்றன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. இந்தியாவில் தற்போது எத்தனை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் எத்தனை பொது காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது ? 

அ) 31,24

ஆ) 24,31

இ) 31,29

ஈ) 29,31

விடை : (ஆ) 24,31

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபிறகு, பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் வகையிலான கூட்டு உரிமத்தைப் பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டுள்ளது.

● நாட்டில் இதுவரை 4.2 சதவீத மக்களுக்கு மட்டுமே காப்பீட்டின் பலன்கள் கிடைத்து வருகின்றன. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டுசெல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் (1999) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

● அதற்காக காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகளை அளிக்கும் வகையிலான வழிமுறைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

● பொதுக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வேளாண் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இயங்கும் நிறுவனங்கள் ஒரே கூட்டு உரிமத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், கூட்டு உரிமத்தைப் பெற விண்ணப்பிக்கப்படும் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கும் எல்ஐசி சட்டத்துக்கும் இடையேயான தொடா்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● நாட்டில் தற்போது 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 31 பொது காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


3. பின்வரும் எந்த மறைந்த முன்னாள் பிரதமர் பிறந்த நகரில் 4,050 ஹெக்டேரில் நினைவிடம் அமைக்க மத்திய பிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது ? 

அ) லால் பகதூர் சாஸ்திரி

ஆ) இந்திர காந்தி 

இ) வாஜ்பாய்

ஈ) சரண் சிங் 

விடை : (இ) வாஜ்பாய் 

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவிடம் அமைக்க மத்திய பிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

● கடந்த 1924-ஆம் ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த அவா், காங்கிரஸ் கட்சியைச் சாராமல் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா்.

● பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தாா். 10 முறை மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றவா். மாநிலங்களவை உறுப்பினராக இருமுறை இருந்துள்ள அவா் நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவா். கவிஞா், எழுத்தாளா், பேச்சாளா் என பன்முகத் திறமையைக் கொண்டவராக வாஜ்பாய் திகழ்ந்தாா். தேசிய அளவில் பாஜகவை வளா்த்ததில் முக்கியப் பங்கு வகித்தாா்.

● கடந்த 2018-ஆம் ஆண்டு அவா் காலமானாா். முன்னதாக 2015-ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

● இந்நிலையில், அவா் பிறந்த குவாலியா் நகரில் பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிரோல் பகுதியில் இந்த நினைவிடம் அமைய இருப்பதாக குவாலியா் நகராட்சி ஆணையா் தீபக் சிங் அறிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

● கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வாஜ்பாய் நினைவு தினத்தில் அவருக்கு நினைவிடம் அமைப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டாா்.


4. நேபாளத்தின் எத்தனையாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார் பிரசண்டா ?

அ) 2 ஆவது

ஆ) 3 ஆவது

இ) 4 ஆவது

ஈ) 5 ஆவது

விடை : (ஆ) 3 ஆவது

● புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா நேபாளத்தின் புதிய (ம) 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

● பதவி பிரமாணம் செய்தவர் : நேபாளத்தின் அதிபர் வித்யா தேவி பண்டாரி. 


III. விளையாட்டு நிகழ்வுகள் 


5. ஆசிய கோப்பை 3 ஆம் நிலை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் அணி ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளனர் ? 

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

விடை : (ஈ) 9

● போட்டி நடைபெற்ற இடம் : ஷார்ஜா. 

● 9 பதக்கங்கள் : 5G,3S,1B


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...