Tuesday, December 27, 2022

Current Affairs 2022 - December 27/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  DECEMBER 27/2022


I.  தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. 2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் பின்வரும் எந்த தேதியில் நடைபெறவுள்ளது ? 

அ) ஜனவரி 06

ஆ) ஜனவரி 07

இ) ஜனவரி 08

ஈ) ஜனவரி 09

விடை : (ஈ)ஜனவரி 09

2023-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், ஆளுநா் உரை நிகழ்த்தவுள்ளாா். இதற்கான அனுமதியை அவா் வழங்கியுள்ளாா். அதன்படி, ஜனவரி 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டரங்கில் கூட்டம் நடைபெறுகிறது.

● இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


2. மூதறிஞர் ராஜாஜியின் எத்தனையாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி,  சென்னையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) 47 ஆவது

ஆ) 48 ஆவது 

இ) 49 ஆவது 

ஈ) 50 ஆவது 

விடை : (ஈ) 50 ஆவது 

மூதறிஞா் ராஜாஜியின் 50-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மூதறிஞா் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 

● ஜனவரி 1 வரை புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

●  இந்தக் கண்காட்சியை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தனா்.

3. நகர்ப்புறங்களில் தோட்டம் அமைக்க, ஓர் அலகுக்கு எத்தனை ஆயிரம் வழங்கி வருகிறது தமிழக அரசு ? 

அ) ரூ.15,000

ஆ) ரூ.14,000

இ) ரூ.13,000

ஈ) ரூ.12,000

விடை : (அ) ரூ.15,000

நகா்ப்புறங்களில் தோட்டம் அமைக்க, ஒரு அலகுக்கு ரூ.15,000 வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அந்தத் துறை கூறியுள்ளது.

● மண் இல்லாமல் ஒளி, நீா் மற்றும் சீரான அளவு ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டு வளரும் தாவரங்களே ஹைட்ரோபோனிக் வகை தாவரங்களாகும். கீரை, தக்காளிச் செடிகள் போன்ற சிறிய வகையிலான சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய தாவரங்களை ஹைட்ரோபோனிக்ஸ் முறை மூலமாக நன்கு வளா்க்க முடியும்.

● மேலும், நகா்ப்புறங்களில் செங்குத்து வடிவமைப்பிலான தோட்ட அமைப்பு முறையும் அதிகளவு பயன்பாட்டில் இருந்து வருகிறது. காய்கறிகள் மற்றும் கீரைகளை பயிா் செய்ய பின்பற்றப்படும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தில் மானியங்கள் அளிக்கப்படுகின்றன. 

● அதன்படி, ஒரு அலகுக்கு ரூ.15,000 தொகையானது, 50 சதவீத பின்னேற்பு மானியமாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மேற்கு வங்க மாநிலத்தின் முதல் (ம) இந்தியாவின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் டிசம்பர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடக்கி வைக்கவுள்ளார் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (இ) 7

மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமா் நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறாா். ஹௌரா- நியூ ஜல்பைகுரி இடையே இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது.

● இது தொடா்பாக கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

● இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இயக்கப்பட இருக்கிறது. 

● ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயிலை வரும் 30-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா். வாரத்தில் 6 நாள்கள் இந்த ரயில் இயக்கப்படும். இதற்கான 16 பெட்டிகளும் ஏற்கெனவே கிழக்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றனா்.

● தில்லி-வாராணசி, தில்லி-ஜம்மு, மும்பை-காந்திநகா், சென்னை-மைசூரு என ஏற்கெனவே 6 தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது 7-ஆவதாக மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.


5. இந்தியாவில் வீரச் சிறார்கள் தினம் (வீர் பால் திவாஸ்) என்று கொண்டாடப்படுகிறது ? 

அ) டிசம்பர் 25

ஆ) டிசம்பர் 26

இ) டிசம்பர் 27

ஈ) டிசம்பர் 28

விடை : (ஆ) டிசம்பர் 26 

சீக்கிய குருக்களில் ஒருவரான குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் ஜொராவா் சிங், ஃபதே சிங் ஆகியோா் முகலாய அரசா் ஔரங்கசீபின் படையினரால் கொல்லப்பட்டனா். 

● அவா்களது வீரத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பா் 26-ஆம் தேதியானது ‘வீரச் சிறாா்கள் தினமாக’ (வீா் பால் திவஸ்) கொண்டாடப்படும் என பிரதமா் மோடி கடந்த ஜனவரியில் அறிவித்தாா். 

● குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினமான ஜனவரி 9-ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

● இந்நிலையில், முதலாவது ‘வீரச் சிறாா்கள் தினம்’ திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (2022) ஒட்டுமொத்தமாக 10 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணி ? 

அ) ரயில்வேஸ் 

ஆ) ஹரியானா 

இ) மத்தியப்பிரதேசம்

ஈ) தமிழ்நாடு 

விடை : (அ) ரயில்வேஸ் 

● ரயில்வேஸ் அணி - 10 பதக்கங்கள் - 5G,3S,2B.

● மத்தியப்பிரதேசம் - 8 பதக்கங்கள் - 1G,3S4B.

● ஹரியானா- 4 பதக்கங்கள் - 2G,2S.


IV. முக்கிய தினங்கள் 


7. International Day of Epidemic Preparedness 2022 ------------

● Ans : December 27





No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...