Wednesday, December 28, 2022

Current Affairs 2022 - December 28/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                  DECEMBER 28/2022

   I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81 ஆவது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ராகுல் காந்தி 

ஆ) சோனியா காந்தி 

இ) ஆர்.என். ரவி

ஈ) மு.க.ஸ்டாலின் 

விடை : (ஈ) மு.க.ஸ்டாலின் 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. இந்தியாவின் இணையவழி விளையாட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பு பின்வரும் எந்த அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது ? 

அ) மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இ) மத்திய வெளியுறவு அமைச்சகம்

ஈ) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

விடை : (ஆ) மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இணையவழி விளையாட்டுகளை நிா்வகிக்கும் பொறுப்பு மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

● இணையவழி விளையாட்டுகள் பிரிவானது மத்திய இளைஞா் நலன்-விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டுத் துறையிடம் இருந்தது. இந்நிலையில், இணையவழி விளையாட்டுகள் பிரிவின் நிா்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் அப்பிரிவு தற்போது மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

● அதற்காக அலுவல் ஒதுக்கீடு விதிகளில் மத்திய அரசு அண்மையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக மத்திய மின்னணு-தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க நடவடிக்கைகளுக்கு அரசு தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. அதே வேளையில், தொழில்நுட்ப வாய்ப்புகள் சட்டவிரோதச் செயல்களில் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

● இணையவழி விளையாட்டுகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை அமைச்சகம் விரைவில் வெளியிடவுள்ளது. அது தொடா்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபிறகு விதிகள் இறுதிசெய்யப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.


3. மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் எத்தனை கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது ? 

அ) ரூ.140.12 லட்சம் கோடி

ஆ) ரூ.143.13 லட்சம் கோடி

இ) ரூ.144.17 லட்சம் கோடி

ஈ) ரூ.147.19 லட்சம் கோடி 

விடை : (ஈ) ரூ.147.19 லட்சம் கோடி

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பா் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

● அரசின் கடன் மேலாண்மை குறித்த அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

● நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசின் கடன் ரூ.145.72 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீத உயா்வாகும்.

●2-ஆவது நிதியாண்டில் நிதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,22,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. ஆனால், ரூ.4,06,000 கோடியை மட்டுமே மத்திய அரசு ஈட்டியது. அதே வேளையில், நிதிப் பத்திரங்களைத் திரும்பப் பெற்ன் மூலமாக ரூ.92,371.15 கோடியை அரசு வழங்கியுள்ளது.

● இந்தக் காலகட்டத்தில் அரசின் நிதிப் பத்திரங்களை விற்பதற்காகத் திறந்தவெளி சந்தை நடவடிக்கைகள் (ஓஎம்ஓ) எதையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. அரசு சாா்பில் வெளியிடப்பட்ட நிதிப் பத்திரங்கள் மூலமான வருவாய், பணவீக்கம், பணப்புழக்கம் உள்ளிட்ட காரணங்களால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டது.

● அரசின் நிதிப் பத்திரங்களில் 38.3 சதவீதத்தை வா்த்தக வங்கிகள் வைத்துள்ளன. இது ஜூன் வரையிலான காலத்தில் 38.04 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயா்த்தியது.

● ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.11 சதவீதம் சரிவடைந்தது. ஜூலை 1-ஆம் தேதி 79.09-ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, செப்டம்பா் 30-ஆம் தேதி 81.55-ஆக சரிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


4. அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ள நீர் மின் திட்டங்கள், மின் நிலையங்களுக்கான அமைப்பு முறையை உருவாக்க பின்வரும் எந்த அமைச்சகமும் டிஆர்டிஓ வும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன ? 

அ) மத்திய எரிசக்தி துறை

ஆ) மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இ) மத்திய வெளியுறவு அமைச்சகம்

ஈ) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

விடை : (அ) மத்திய எரிசக்தி துறை

அதிக பாதிப்புக்குள்ளாகும் நீர்நிலைத் திட்டங்கள்/மின் நிலையங்களுக்கான முன் எச்சரிக்கை அமைப்பைச் செயல்படுத்துவதற்காக டிசம்பர் 27, 2022 அன்று பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உடன் மின் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

● இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்சார அமைச்சகத்தின் செயலாளர் ஷி அலோக் குமார் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் (R&D) மற்றும் DRDO தலைவர் டாக்டர் சமீர் வி காமத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

● பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள், பனிப்பாறைகள், பனிப்பாறை ஏரிகள் மற்றும் பிற புவிசார் ஆபத்துகளுக்கு எதிராக பொருத்தமான தணிப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு மின் அமைச்சகம் மற்றும் DRDO இணைந்து செயல்படும். 

● DRDO-வின் நிபுணத்துவம், மலைப்பாங்கான பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய நீர்மின் திட்டங்கள்/மின் நிலையங்களுக்கு விரிவான முன் எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பரந்த புரிதலுடன் DRDO மற்றும் தொடர்புடைய திட்ட உருவாக்குநர்(கள்) இடையே தனி மற்றும் குறிப்பிட்ட பணிகள் உருவாக்கப்படும்.


5. நஞ்சுக் கொடியிலிருந்து ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி உலகிலேயே முதல் இதய அறுவை சிகிச்சை எங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது ? 

அ ) ரஷ்யா

ஆ) ஜப்பான்

இ) சீனா 

ஈ) இங்கிலாந்து 

விடை : (ஈ) இங்கிலாந்து 

● இங்கிலாந்தில் உள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர், நஞ்சுக் கொடியிலிருந்து ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி உலகிலேயே முதல் இதய அறுவை சிகிச்சை எங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளார்.


6. இந்தியாவின் முதல் காலாட்படை அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) மத்திய பிரதேசம்

இ) கேரளா 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஆ) மத்திய பிரதேசம் 

நாட்டின் முதல் காலாட்படை அருங்காட்சியகம் மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் கன்டோன்மென்ட்டில் திறக்கப்பட்டுள்ளது.

●இந்த அருங்காட்சியகம் நாட்டிலேயே முதல் மற்றும் உலகில் இரண்டாவது. இதற்கு முன், இதுபோன்ற ஒரு அருங்காட்சியகம் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளது. வெற்றி நாள் மற்றும் காலாட்படை பள்ளி நிறுவப்பட்ட 75 வது ஆண்டை முன்னிட்டு இராணுவம் திறக்கப்பட்டது. 

● காலாட்படையை காட்சிப்படுத்தும் நோக்கத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்த திட்டம் ஜூலை 2003 இல் தேசிய அளவிலான பயிற்சி கூடம் மற்றும் ஆராய்ச்சி மையமாக உருவாக்கப்பட்டது.




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...