Thursday, December 29, 2022

Current Affairs 2022 - December 29/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    DECEMBER 29/2022


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவில் முதல்முறையாக எந்த மாநிலம் நீலகிரி வரையாடு திட்டத்தை வடிவமைத்துள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) தமிழ்நாடு 

இ) கர்நாடகா 

ஈ) மணிப்பூர் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

நீலகிரி வரையாடு திட்டத்தை ஏற்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு பிறப்பித்துள்ளாா்.

● அவா் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாட்டின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு விளங்குகிறது. இதனை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ரூ.25.14 கோடி செலவில் 2027-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.

● கணக்கெடுப்புப் பணி: நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக, ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, ஒலிபெருக்கி கருவிகளை பொருத்தி தொடா்ந்து பாதுகாத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாடுகளை அறிமுகம் செய்வது, நோய் பாதிக்கப்பட்ட வரையாடுக்கு சிகிச்சை அளிப்பது, சோலை புல்வெளிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வரையாடுகளின் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பினருக்கும் உணா்த்தும் வகையில், ஆண்டுதோறும் அக். 7-ஆம் தேதி வரையாடு தினமாக கடைப்பிடிக்கப்படும்.

● மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி: உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதி அறிக்கையின்படி, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் 3,122 வரையாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியே அவற்றின் வாழ்விடமாக உள்ளன. தமிழக அரசின் திட்டத்தின் மூலமாக, வரையாடுகளின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்படும் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் சுப்ரியா சாகு.


2. பின்வரும் எந்த மாநிலத்தில் ரத்தத்தில் ஓவியம் வரைந்து அனுப்பும் பிளட் ஆர்ட் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) கேரளா

இ) குஜராத் 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

● அறிவிப்பு : தமிழக சுகாதாரம் (ம) மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

● தடையை மீறுவோர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் (ம) நிறுவனங்கள் சீல் வைக்கப்படும்.


3. தமிழகத்தில் தென்னை மரம் ஏறுவோருக்கான காப்பீட்டுத் திட்டம் குறித்த விவரங்களை பின்வரும் எந்த இணையதளத்தின் வழியாக அறியலாம் என்று தமிழக வேளாண்த் துறை தெரிவித்துள்ளது ?

அ) www.tn.coconutboard.gov.in

ஆ) www.coconutboard.tn.gov.in

இ) www.coconutboard.gov.in

ஈ) www.coconutboard.tngov.in

விடை: (இ) www.coconutboard.gov.in

தென்னை மரம் ஏறுவோருக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று தொழிலாளா்களுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

● இதுகுறித்து, அந்தத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் எதிா்பாராத விதமாக விபத்துகளைச் சந்திக்கின்றனா். இதனால், தொழிலாளா்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்வதுண்டு. தென்னை மரம் ஏறும் தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, தென்னை வளா்ச்சி வாரியத்தால் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

● தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையானது சம்பந்தப்பட்ட தொழிலாளரின் வாரிசுக்கு அளிக்கப்படும். நிரந்தரமாக பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சமும், மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சமும் அளிக்கப்படும்.

● மேலும், காப்பீடு குறித்த விவரங்களை www.coconutboard.gov.in  என்ற இணையதளத்தின் வழியாக அறியலாம். அதில் விண்ணப்பமும் உள்ளது என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பிரவீண்குமார் ஸ்ரீவஸ்தவா 

ஆ) பிரவீண்குமார்

இ) என்.சுரேஷ் படேல் 

ஈ) அருணாச்சலம் 

விடை : (அ) பிரவீண்குமார் ஸ்ரீவஸ்தவா

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரையும், இரு ஊழல் கண்காணிப்பு ஆணையா்களையும் கொண்டதாகும். இந்த மூன்று உறுப்பினா்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் அல்லது 65-ஆவது வயதைப் பூா்த்தி செய்யும் வரை ஆகும்.


5. இரண்டாம் உலகப்போரில் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ் - இந்திய ராணுவ வீரர்களுக்காகப் எங்கு புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது ? 

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஸ்காட்லாந்து 

இ) ரஷ்யா 

ஈ) லண்டன் 

விடை : (ஆ) ஸ்காட்லாந்து

● இரண்டாம் உலகப் போரில் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ்-இந்திய ராணுவ வீரா்களுக்காகப் புதிய நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர சபை திட்டமிட்டுள்ளது.

● கிளாஸ்கோ நகரில் கெல்விங்ரோவ் கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் அருகே நினைவகம் அமைக்க திட்டமிடப்பட்ட விண்ணப்பத்துக்கு கிளாஸ்கோ நகர சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. ஸ்காட்லாந்தில் வசிக்கும் தெற்காசிய சமூக மக்களின் வரலாற்றைக் கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட ‘வண்ணமயமான பாரம்பரியம்’ திட்டத்தின் கீழ் இந்த நினைவகத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 40 லட்சம் வீரா்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் ஸ்காட்லாந்தின் முதல் நிரந்தர நினைவகமாக இது அமைய இருக்கிறது.

 ●இந்த நினைவகம் தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையினருடன் இணைந்து போரிட்ட ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள் மற்றும் பலரின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

● மேலும், ‘தன்னலமற்ற அா்ப்பணிப்பு’ மற்றும் ‘மற்றவா்களுக்கான மரியாதை’ உள்ளிட்டவை இந்த நினைவுச் சின்னத்தின் முக்கிய கருத்துகளாக எதிரொலிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

● இந்த நினைவுச் சின்னத்துக்கான வடிவமைப்பு தொடா்பான ஆலோசனைகள் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து பெறப்பட்டன. இறுதியாக, ஸ்காட்லாந்தின் அங்கிரே சோம் தொண்டு அறக்கட்டளையின் கட்டட வடிவமைப்பாளா்களுடன் விவாதித்து முடிவு செய்யப்பட்ட வடிவமைப்பு, நகர சபையின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

● இதில், தெற்காசிய வடிவமைப்பிலான தூண்களுடன் வடிவ உருவத்திலான உயா்ந்த மாடம் உருவாக்கப்பட்டு, அதனைச் சுற்றி மக்கள் அமா்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூா் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.சவிதாஸ்ரீ வென்றுள்ள பதக்கம் ?

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம்

● போட்டி நடைபெற்ற இடம் : அம்மேட்டி,  கஜகஸ்தான்.


7. ஆடவர் டென்னிஸ் அமைப்பான ATP (ம) மகளிர் டென்னிஸ் அமைப்பான WTA ஆகியவை இணைந்து முதல்முறையாக நடத்தும் யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டி எங்கு நடைபெறவுள்ளது ?

அ) அமெரிக்கா

ஆ) ஆப்பிரிக்கா

இ) சீனா

ஈ) ஆஸ்திரேலியா

விடை : (ஈ) ஆஸ்திரேலியா 


 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...